இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
மக்லசுர் ரகுமான் சவுத்ரி ( Mukhlesur Rahman Chowdhury வங்காள மொழி: মোখলেসুর রহমান চৌধুরী ), மக்கல்சு சவுத்ரி என்றும் இவர் பரவலாக அழைக்கப்படும் இவர் வங்காளதேச பத்திரிகையாளர் ,அரசியல்வாதி ஆவார். 2004 ஆம் ஆண்டில், சவுத்ரி பத்திரிகையாளர் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் வங்காளதேசத்தின் குடியரசுத் தலைவர் இஜுதீன் அகமதுவால் நியமிக்கப்பட்டார். அந்தப் பணியில் டிசம்பர் 2004 முதல் நவம்பர் 2006 வரை பணியாற்றினார்.[1][2] 2006 இல் தலைமை ஆலோசகராக இஜுதீன் பொறுப்பேற்றபோது, சவுத்ரியை தனது ஆலோசகர்களில் ஒருவராக குடியரசுத் தலைவர் நியமித்தார்.[3].[4]
முகலேசூர் ரஹ்மான் சவுத்ரி, அஜிசூர் ரஹ்மான் சவுத்ரியின் மூத்த மகன் ஆவார்.[5] வாராந்திர பிரீக்ஷிட்டின் முதல் தலைமை பாதிப்பாசிரியர் ஆவார்.[6] இவரது சொந்த கிராமம் லக்காவில் உள்ள கதிஹாரா ஆகும். இவர் நசிர்நகரின் குலிகுண்டாவில் பிறந்தார். சவுத்ரி தனது குழந்தைப் பருவத்தின் அதிக நாட்களை சில்ஹெட் மாவட்டத்தில் கழித்தார்.[7][8]
முகிலஸ் சவுத்ரி மக்கள் தகவல் தொடர்பியல் மற்றும் ஊடகவியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும் தாக்கா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார்.[9] சவுத்ரி லண்டன் பல்கலைக்கழகத்தின் பிர்க்பெக்கிலிருந்து அரசியல் பிரிவில் ஆய்வுப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[10] மேலும் கிங்ஸ்-யு.என்.எச்.சி.ஆர் உதவித்தொகையின் கீழ் லண்டன் பல்கலைக்கழகத்தின் கிங்ஸ் கல்லூரியில் அரசியலில் ஆராய்ச்சி பட்டம் பெற்றார்.[11] வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் குர்ஆனுக்காக அரபு மொழியில் இரண்டு ஆராய்ச்சி படிப்புகளை முடித்தார், மேலும் ராயல் ஹோலோவேயில் குர் ஆன் பற்றிய ஆராய்ச்சியையும் மேற்கொண்டார்.[12] சவுத்ரி இலண்டன் பொருளியல் பள்ளியில் இரண்டு ஆராய்ச்சி படிப்புகளை முடித்தார் [13] மற்றும் பிரிட்டனில் உள்ள ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் அரசியலில் பி.எச்.டி பட்டம் பெற்றார்.[14]
1985 ஆம் ஆண்டில் டைனிக் பத்ரிகா என்ற செய்தித்தாளில் தலைமை நிருபராக சேர்ந்தார். சவுத்ரி 1986 ஜனவரி 31 இல் இவர் முதன்மைப் பதிப்பாளராக பணியில் சேர்ந்தார். 1989 ஆம் ஆண்டின் முற்பகுதியில், அவர் டைனிக் நாபா அவிஜான் நிறுவனத்ஹில் பணியில் சேர்ந்தார். ஆனால் அந்த ஆண்டின் இறுதியில் டைனிக் பத்ரிகாவுக்கு மீண்டும் சேர்ந்தார். 1981 ஆம் ஆண்டு முதல் அவர் இதழியல் சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். தைனிக் பங்களா, தைனிக் தேஷ், பிசித்ரா, ராபர், சண்டே எக்ஸ்பிரஸ், ஹாலிடே மற்றும் கபோரர் கராஜ் ஆகிய பத்திரிக்கைகளில் பணிகளை மேற்கொண்டார். ஜனவரி 1991 இல், அவர் அஜ்கர் ககோஜின் சிறப்பு நிருபராகப் பணியில் சேர்ந்தார். செப்டம்பர் 1991 இல், சவுத்ரி தூதரக ஆசிரியராகவும், டைனிக் தின்கலின் சிறப்பு நிருபராகவும் ஆனார் [15]
1993 ஆம் ஆண்டில், இலங்கையின் செய்தித்தாளின் வங்காளதேசத்தின் நிருபராகப் பணியில் சேர்ந்தார்.[16][17] அவர் வீக்லி சரக், வீக்லி ப்ரீக்ஷித் மற்றும் ஸ்ரோமோ ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும். பணியாற்றினார். [18]
2004 ஆம் ஆண்டில், சவுத்ரி பத்திரிகையாளர் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் வங்காளதேசத்தின் குடியரசுத் தலைவர் இஜுதீன் அகமதுவால் நியமிக்கப்பட்டார். அந்தப் பணியில் டிசம்பர் 2004 முதல் நவம்பர் 2006 வரை பணியாற்றினார்.[1][2] 2006 இல் தலைமை ஆலோசகராக இஜுதீன் பொறுப்பேற்றபோது, சவுத்ரியை தனது ஆலோசகர்களில் ஒருவராக குடியரசுத் தலைவர் நியமித்தார்.[3]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)