மங்கிதா தேவி யாதவ் (Mangita Devi)(பிறப்பு 6 ஏப்ரல் 1981) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார்.[1][2] தேவி இராச்டிரிய ஜனதா தளம் கட்சியினை சார்ந்தவர். பீகார் சட்டமன்றத்திற்கு 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் சீதாமரி மாவட்டத்தில் உள்ள ரன்னிசைத்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக 2015 முதல் 2020 வரை பதவி வகித்தார்.[3]