மசுகார்டின் (Muscardine) என்பது பூச்சிகளில் ஏற்படும் ஒரு நோய் ஆகும். இது பல வகையான என்டோமோபாத்தோஜெனிக் பூஞ்சைகளால் ஏற்படுகிறது. பல மசுகார்டின்கள் பட்டுப்புழுக்களைப் பாதிக்கும் என்று அறியப்படுகிறது.[1] மசுகார்டினை கால்சினோ என்றும் அழைக்கலாம்.[2][3]
19ஆம் நூற்றாண்டில் பட்டுப்புழுக்களில் மசுகார்டின் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் போது, அகோசுடினோ பாசி பூஞ்சை ஒன்று இந்நோய்க்குக் காரணம் என்பதைக் கண்டறிந்தார். இது நோய்க்கான கிருமிக் கோட்பாட்டின் முதல் நிரூபணம் ஆகும். முதல் முறையாக நுண்ணுயிரி ஒரு விலங்கு நோய்க்கிருமியாக அங்கீகரிக்கப்பட்டது.[4]
மசுகார்டினில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு பூஞ்சையும் பட்டுப்பூச்சியின் மீது விட்டுச்செல்லும் கோனிடியல் அடுக்கின் நிறத்தின் அடிப்படையில் பெயரிடப்படுகின்றன.[1]
பியூவேரியா ப்ரோங்னியார்ட்டி மற்றும் மெட்டாரைசியம் அனிசோப்லியா ஆகிய பூஞ்சைகளால் கருப்பு மசுகார்டின் ஏற்படுகிறது.[1]
மெட்டாரைசியம் பேரினத்தினைச் சேர்ந்த மெ. அனிசோபிலிலே 200க்கும் மேற்பட்ட பூச்சிகளில் இக்கொடிய நோயை ஏற்படுத்தலாம்.[5]
பூச்சிகளின் அசுபெர்ஜிலோசிசு பழுப்பு மசுகார்டின் நோயினை ஏற்படுத்துகிறது. சுமார் 10 =க்கும் மேற்பட்ட அசுபெர்ஜிலோசிசு சிற்றினங்கள் (அ. பிளேவசு மற்றும் அ. டமாரி) இந்நோயை ஏற்படுத்தலாம். காமிடுயல் அடுக்கு பழுப்பு அல்லது பசுமை கலந்த மஞ்சள் நிறமாக இருக்கலாம்.[1]
புல் போன்ற பசுமையான மசுகார்டை கிர்சுடெல்லா நெகாட்ரிக்சசு பூஞ்சையினால் ஏற்படுகிறது.[6] இந்த பூஞ்சை இதன் புரவலன் உடலில் உள்ள கைட்டின்அடுக்கினை உடைக்கும் நொதியை உருவாக்குகிறது.[7]
சாம்பல் மசுகார்டின் இசாரியா ஜவானிகாவால் ஏற்படுகிறது.[6]
பச்சை மசுகார்டின் நோமுரேயா ரிலேயி மற்றும் மெட்டாரைசியம் சிற்றினங்களால் ஏற்படுகிறது. பட்டுப்புழுக்களைப் பராமரிப்பவர்கள், இளம் உயிரிகளில் பக்கங்களிலும் பின்புறத்திலும் அடர் பழுப்பு நிற காயங்கள் போன்ற அறிகுறிகளை இதன் அடையாளமா கண்டு இந்நோய்த் தாக்கத்தினை உணரலாம். நோய் பாதிக்கப்பட்ட இளம் உயிரி இறக்கும்போது வெண்மையாக மாறி ஒரு சில நாட்களுக்குள் பிரகாசமான பச்சை நிற பூஞ்சை பூசினால் மூடப்பட்டுக் காணப்படும்.[2]
ஆரஞ்சு மசுகார்டின் இசுடெரிக்மாடோசிசுடிசு ஜபோனிகாவால் ஏற்படுகிறது. [1]
பூச்சிகளின் பென்சிலோசிசு என்பது ஒரு வகை மசுகார்டின் நோயாகக் கருதப்படுகிறது. குறிப்பாக பென்சிலியம் சிட்ரினம் மற்றும் பி. கிரானுலேட்டம் ஆகியவற்றால் இது ஏற்படுகிறது.[1]
ஸ்போரோசுபோரெல்லா யுவெல்லா[1] மற்றும் இசாரியா புமோசோரோசியசு ஆகியவற்றால் சிவப்பு மசுகார்டின் நோய் ஏற்படுகிறது.[6]
மிகவும் அறியப்பட்ட வடிவங்களில் ஒன்று வெள்ளை மசுகார்டின் ஆகும். இது பியூவேரியா பாசியானாவால் ஏற்படுகிறது.[8]
வெள்ளை மசுகார்டைன் நோயால் பாதிக்கப்படும்போது, ஒரு பூச்சியின் இளம் உயிரி செயலிழந்து உணவு அருந்துவதை நிறுத்தலாம். இதன் மேற்புறத்தின் நெகிழ்ச்சித்தன்மை இழக்கப்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறது. இறந்துபோகும் நோய் தாக்குதலுக்கு உள்ளான பூச்சி கடினமாகிறது.[1] பூஞ்சை தன் புரவலன் உடல் முழுவதும் வெள்ளை கொனிடியாவால் மூடுகிறது [8] ஆக்சலேட் படிகங்கள் படிவதன் காரணமாகப் பூஞ்சை அடுக்கு கடினமாக மாறிவிடும். இதனால் உடல் மேலும் சிதைவடைவது குறைகிறது.[1] நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகும் கூட்டுப்புழு பதப்படுகிறது. பூஞ்சை வளரும் முன்னர் பாதிப்பிற்குள்ள பூச்சிகள் சுருங்கி நெளிக்கின்றன. முதிர்ச்சியடைந்த அந்துப்பூச்சியில், உடல் கடினமாகி இறக்கைகள் உதிர்ந்து விடும்.[2]
நோய்த்தொற்றின் போது, பூஞ்சை புரவலன் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகிறது. பூச்சியின் குருதிநிணம் படிகமாகி கெட்டியாகிறது. பூஞ்சை பொதுவாக நச்சுகளையும் உற்பத்தி செய்கிறது. புரவலரைக் கொன்ற பிறகும், பூஞ்சை பூச்சியின் உடலிலிருந்து தண்ணீரை உறிஞ்சுவதைத் தொடர்கிறது, இதனால் நோய்த்தாக்குதலுக்கு உள்ள பூச்சியின் உடல் மேலும் கடினமாகிறது.[2]
வெள்ளை மசுகார்டின் நோய்த்தாக்குதலுக்கு வாய்ப்புள்ள மற்ற பூச்சிகளில் பழுப்பு நிற செடிகொடி [8] மற்றும் டயப்ரெப்ஸ் வேர் அந்துப்பூச்சி ஆகியவை அடங்கும்.[9]
இசாரியா பரினோசா மஞ்சள் மசுகார்டின் நோயினை ஏற்படுத்துகிறது.[1][6]
மஞ்சள் சிவப்பு மசுகார்டின் ஐசாரியா புமோசோரோசியசால் ஏற்படுகிறது. இது வெளிப்புற உடலில் சிவப்பு நிறத் திட்டுகளையும் உட்புறமாக வித்திகளின் தூள் நிறைகளையும் உருவாக்கும்.[1]
அசாடிராக்டின் மற்றும் பைட்டோஅலெக்சின் போன்ற பூஞ்சைக் கொல்லிகள் சில மசுகார்டின் நோய்க்கிருமிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன.[10] பட்டுப்புழு வளர்ப்பவர்கள் தங்கள் புழுவளரிடங்களில் பூஞ்சையின் வளர்ச்சியைத் தடுக்க, கால்சியம் ஐத்ராக்சைடு (சுண்ணாம்பு தூசி) தூசியினை போடுகிறார்கள்.[11] இந்தியாவில் பார்மால்டிகைடில் ஊறவைக்கப்பட்ட சாப்பின் துகள்கள் இளம் உயிரிகளின் மீது தூவிப் பயன்படுத்தப்படுகிறது.[12]
{{cite book}}
: Unknown parameter |nopp=
ignored (help); Unknown parameter |மொழி-=
ignored (help)