மஞ்சு பாரத் ராம்

மஞ்சு பாரத் ராம்
பிறப்பு(1945-12-29)29 திசம்பர் 1945
இறப்பு12 திசம்பர் 2012(2012-12-12) (அகவை 66) [1]
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்தி பிரான்க் ஆன்டணி பொதுப் பள்ளி, புது தில்லி
அறியப்படுவதுபுது தில்லியிலுள்ள ஸ்ரீ ராம் பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர்
வாழ்க்கைத்
துணை
அருண் பாரத் ரம்
பிள்ளைகள்ஆஷிஷ், கார்த்திக், வாசவி
விருதுகள்'பிரியதர்சினி விருது 1989', கர்மவீர் புரஸ்கார், பத்மசிறீ 2013

மஞ்சு பாரத் ராம் (Manju Bharat Ram; 29 டிசம்பர் 1945 - 12 டிசம்பர் 2012 ) ஒரு இந்திய கல்வியாளர் ஆவார். புது தில்லியிலுள்ள ஸ்ரீராம் பள்ளிகள் குழுமத்தின் நிறுவனரான இவர், அதன் நிர்வாகக் குழுவின் தலைவராகவும், அறங்காவலர் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். இந்தப் பள்ளி, 2008, [2] 2009 [3] [4] 2011 இல் எஜுகேஷன் வேர்ல்ட் பரணிடப்பட்டது 2016-07-12 at the வந்தவழி இயந்திரம் ஸ்கூல்ஸ் மூலம் இந்தியாவின் நம்பர். 1 நாள் பள்ளியாக தரவரிசைப்படுத்தப்பட்டது.

இவர் பிரபல தொழிலதிபரும் எஸ்ஆர்எப் நிறுவனத்தின் தலைவருமான அருண் பரத் ராமின் மனைவி ஆவார். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை, எம். பி. குப்தா ஒரு தொழிலதிபர். அம்மா உஷா குப்தாவின் பெயரால் இப்போது பிரபலமான எஃப்எம்சிஜி பிராண்ட் உஷா என்று பெயரிடப்பட்டது.

கல்வித் துறைகளில் பல பரோபகார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இவர், ஸ்ரீ ராம் பள்ளிகள் மூலம், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு 10 சதவீத இடங்களை ஒதுக்குவதன் மூலம் உள்ளடக்கியதன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இந்த குழந்தைகளின் குறைபாடுகளை சமாளிக்க சிறப்பு ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவதையும், பின்னர் வழக்கமான வகுப்புகளில் குழந்தைகள் முக்கிய பாடங்கள் படிப்பதையும் இவர் உறுதி செய்தார். பள்ளி சிங்கப்பூரில் இருந்தும் ஐக்கிய அமெரிக்க நாடுகள்; இங்கிலாந்து; சீனா; சர்வதேச அளவில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளைக் கற்றுக்கொள்வதற்காக ஜெர்மனி, பிரான்சு போன்ற பல சர்வதேச தொடர்புடைய பள்ளிகளுடன் இணைந்து செயல்படுகிறது. இவரது கவ்விப் பணிக்காக 2013 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது. [5]

சான்றுகள்

[தொகு]
  1. "The Shri Ram School founder Manju Bharat Ram dies". Indian Express. 13 December 2012. பார்க்கப்பட்ட நாள் 24 January 2013.
  2. "India's Top Day Schools 2008". Education World. Archived from the original on 29 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 31 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "India's Top Day Schools 2009" இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023082035/http://www.educationworldonline.net/index.php/page-article-choice-more-id-1921. 
  4. "EducationWorld Schools Survey 2011" இம் மூலத்தில் இருந்து 19 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130119051738/http://www.educationworldonline.net/index.php/page-article-choice-more-id-2861. 
  5. Ministry of Home Affairs(25 January 2013). "Padma Awards Announced". செய்திக் குறிப்பு.

வெளி இணைப்புகள்

[தொகு]