மஞ்சு விஷ்ணு Manchu Vishnu | |
---|---|
பிறப்பு | மஞ்சு விஷ்ணு வர்தன் பாபு 23 நவம்பர் 1981[1] சென்னை தமிழ்நாடு இந்தியா |
இருப்பிடம் | ஐதராபாத்து தெலுங்கானா இந்தியா |
பணி | நடிகர் தயாரிப்பாளர் இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2003 – இன்று வரை |
வாழ்க்கைத் துணை | விரநிக்கா ரெட்டி |
பிள்ளைகள் | Ariaana and Viviana |
மஞ்சு விஷ்ணு (ஆங்கில மொழி: Manchu Vishnu) (பிறப்பு: 23 நவம்பர் 1981) ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் பிரபல்யமான நடிகர் மோகன் பாபுவின் மகன் ஆவார். இவரது பெயரில் விஷ்ணு என்ற திரைப்படத்தில் நடித்து, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றவர். இவர் பிரபலங்கள் கிரிக்கெட் கழகம் என்ற போட்டியில் தெலுங்கு திரையுலகத்திற்கு ஆதரவானவர்.
இவர் 23 நவம்பர் 1981ஆம் ஆண்டு சென்னை, தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் பிரபல்யமான நடிகர் மோகன் பாபுவின் மகன் ஆவார். இவருக்கு மஞ்சு மனோஜ் என்ற ஒரு இளையசகோதரரும் மற்றும் மஞ்சு லட்சுமி என்ற ஒரு மூத்த சகோதரியும் உண்டு இவர்களும் நடிகர்கள் ஆவார். இவர் திரைத்துறைத் தொடர்பான படிப்பை மேற்கொண்டார்.