மணமகன் தேவை | |
---|---|
இயக்கம் | பி. ராமகிருஷ்ணா |
தயாரிப்பு | பி. ராமகிருஷ்ணா பரணி பிக்சர்ஸ் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஏ. கருணாநிதி சந்திரபாபு டி. ஆர். ராமச்சந்திரன் பானுமதி ராகினி தேவிகா |
வெளியீடு | மே 17, 1957 |
ஓட்டம் | . |
நீளம் | 17075 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மணமகன் தேவை 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஏ. கருணாநிதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல்களை கே. டி. சந்தானம், அ. மருதகாசி, தஞ்சை என். இராமையாதாஸ் ஆகியோர் இயற்றியிருந்தனர்.[2] கானம் கிருஷ்ணையர் இயற்றிய 'வேலவரே உமைத் தேடி' என்ற பைரவி ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல் இத்திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. பி. பானுமதி அதனைப் பாடியிருந்தார்.[3]