தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | மணாலி கிசோர் தக்சினி |
பிறப்பு | 29 செப்டம்பர் 1997 தானே, மகாராட்டிரம், இந்தியா |
மட்டையாட்ட நடை | வலது கை |
பந்துவீச்சு நடை | வலது கை மிதவேகம் |
உள்ளூர் அணித் தரவுகள் | |
ஆண்டுகள் | அணி |
2016–முதல் | மும்பை பெண்கள் துடுப்பாட்ட அணி |
2020 | ஐ.பி.எல் வெலாசிட்டி |
மூலம்: ESPNcricinfo, 8 சனவரி 2020 |
மணாலி கிசோர் தக்சினி (Manali Dakshini) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஓரு துடுப்பாட்ட வீராங்கனையாவார். 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளராகவும் வலது கை மட்டையாளராகவும் இவர் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார்.[1] [2] ர் மும்பை மற்றும் மேற்கு மண்டல அணிகளுக்காக மணாலி தக்சினி துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுகிறார். 3 முதல்தரப் போட்டிகள், 11 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகள் மற்றும் 21 மகளிர் இருபது20 போட்டிகள் என இவர் துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார்.. [3] [4] [5] ஜனவரி 2019 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் 2018–19 மூத்த மகளிர் போட்டி கோப்பைக்கான இந்தியா புளூ அணியில் இடம் பெற்றார். [6] 2019 சனவரியில் நடைபெற்ற இப்போட்டியில் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடி சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்தார். 2020 மகளிர் டி20 சவாலுக்கான வெலாசிட்டி அணியில் மணாலி தக்சினி தேர்ந்தெடுக்கப்பட்டார். [7]