மணிப்பள்ளி நாரயணராவ் வெங்கடாச்சலய்யா | |
---|---|
![]() | |
25ஆவது இந்தியத் தலைமை நீதிபதி | |
பதவியில் 12 பிப்ரவரி 1993 – 24 அக்டோபர் 1994 | |
நியமிப்பு | சங்கர் தயாள் சர்மா |
முன்னையவர் | இலலித் மோகன் சர்மா |
பின்னவர் | அ. மு. அகமதி |
2வது தலைவர் தேசிய மனித உரிமை ஆணையம் | |
பதவியில் 26 நவம்பர் 1996 – 24 அக்டோபர் 1999 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 அக்டோபர் 1929 |
துணைவர் | பார்வதி |
எம். என். வெங்கடாச்சலய்யா (Manepalli Narayanarao Venkatachaliah) (25 அக்டோபர் 1929 அன்று பிறந்தார்) இந்தியாவின் 25 ஆவது தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தாா்.[1][2][3][4] 1929 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியாவின் தலைைமை நீதிபதியாக 1993 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். தற்போது நவீன குருகுலமாகக் கருதப்படும் சத்குரு சிறீ சத்ய சாய் உயா் கல்வி நிறுவனத்தில் (நிகா்நிலை பல்கலைகழகம்) வேந்தராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தின் ஆசிாியா் - மாணவர் ஒருங்கிணைப்பு, ஒருங்கிணைந்த கல்விமுறையின் பின்னணியில் உருவாக்கப்பட்டது. இது முக்கியமாக அறிவு, பண்பாடு, உடல், சேவை மற்றும் பக்தி ஆகிய ஐந்து புலங்களை உள்ளடக்கியது. [5][6] இந்தியாவின் தேசிய மற்றும் கலாசார மதிப்புகளை மீட்கும் முயற்சியில் ஈடுபடக்கூடிய, தேசிய மதிப்பீடுகளை மீளப்பெறும் அறக்கட்டளையின் ஆலோசனைக் குழு 2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[7]
அறிவியல் துறையில் இளநிலை பட்டமும் மைசூர் பல்கலைக்கழகத்தில் சட்டப் பாடத்தில் இளநிலைப் பட்டமும் பெற்றார். 1951 ஆம் ஆண்டு சட்டத் துறையில் முறைப்படி பயிற்சி பெறத் தாெடங்கினாா். நவம்பர் 6, 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார் . அக்டோபர் 5, 1987 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்த்தப்பட்டார். கடைசியாக, இவா் இந்தியாவின் 25 ஆவது தலைமை நீதிபாதியாக 12 ஜனவாி 1993 இல் நியமிக்கப்பட்டாா். பின்பு அப்பதவியிலிருந்து 24 அக்டோபா் 1994 இல் ஒய்வு பெற்றாா்.[8]
பணி ஓய்வுக்குப் பின்னர் 2003- ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்திற்கான மாற்று மையத்தின் துவக்கத்திற்கான ஆதரவு உட்பட, ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள் பற்றி இவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்..[9]
1996-1998 ஆம் ஆண்டு காலகட்டங்களில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக பணியாற்றினாா். 2000 ஆம் ஆண்டில் அரசியலமைப்பை மறுபரிசீலனை செய்யக் கூடிய தேசிய ஆணையத்திற்கு தலைமை தாங்கினார்..[10][11][12][13]
தற்போது இவர் பிரசாந்த் நிலையத்திலுள்ள சிறீ சத்யா உயா்கல்வி கற்றல் நிறுவனத்தில், வேந்தராக பணியாற்றுகிறார்.
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help)