மணிப்பூருக்கு என தனித்துவமான விளையாட்டுகள் உண்டு.
முக்னா, போலோ, தேங்காயை பயன்படுத்தி விளையாடும் ரக்பி, படகுப் போட்டி ஆகியவை வெளியரங்க விளையாட்டுகளாகும்.
முக்னா என்பது மற்போர் வகை விளையாட்டாகும்.[1][2] பழங்காலந்தொட்டே இந்த விளையாட்டை அரசரோ, உள்ளூர் அமைப்புகளோ நடத்திவந்திருக்கின்றன. வெற்றி பெறுவோர்க்கு வாகையர் பட்டமும், உப்புப் பொதியும், கையால் நெய்யப்பட்ட உடையும் வழங்கப்படும்.
இது ரக்பி காற்பந்து விளையாட்டை ஒத்திருக்கும். பந்துக்கு பதிலாக தேங்காயை பயன்படுத்துவர்.[1] இந்த விளையாட்டு பசும்புல் தரையில் நடத்தப்படும்.[3] விளையாட்டு தொடங்கும் முன் தேங்காய், விழாவை தலைமை தாங்குபவரிடம் தரப்படும். ஒரு அணியினர், இந்த தேங்காயை வைத்துக் கொண்டே இலக்குக் கோட்டை தாண்ட வேண்டும். எதிர்தரப்பினர் தடுக்க முயன்று, தேங்காயை பிடுங்கினால் அவர்களுக்கும் புள்ளிகள் வழங்கப்படும். இது ஆண்டு தோறும் நடத்தப்பட்ட விளையாட்டாகும். அப்பகுதியின் அரசர் தலைமையேற்று விளையாட்டை கண்டுகளிப்பார்.[4]
இதை ஆண்களும் பெண்களும் விளையாடுவர்[1] இரு அணியினர் விளையாடக் கூடிய விளையாட்டில், இலக்கை குறிவைத்து அடிக்க வேண்டும்.