மணிப்பூர் சட்டப் பேரவை | |
---|---|
12வது சட்டப்பேரரவை | |
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
வரலாறு | |
முன்பு | 11வது சட்டப் பேரரவை |
தலைமை | |
சட்டப்பேரரவைத் தலைவர் | தொக்கோம் சத்தியப்பிரதா சிங், பாரதிய ஜனதா கட்சி 24 மார்ச் 2022 முதல் |
துணை சட்டப் பேரரவைத் தலைவர் | காலியிடம் |
கட்டமைப்பு | |
அரசியல் குழுக்கள் | அரசு (53)
எதிர்க்கட்சிகள் (7)
|
தேர்தல்கள் | |
நேரடித் தேர்தல் முறை | |
அண்மைய தேர்தல் | 2022 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல் (28 பிப்ரவரி – 5 மார்ச் 2022) |
அடுத்த தேர்தல் | பிப்ரவரி – மார்ச் 2027 |
கூடும் இடம் | |
இம்பால், மணிப்பூர், இந்தியா -795001 | |
வலைத்தளம் | |
Manipur Legislative Assembly | |
அடிக்குறிப்புகள் | |
Manipur Assembly Election results |
மணிப்பூர் சட்டப் பேரவை (Manipur Legislative Assembly), வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஓரவை முறைமை கொண்ட சட்டமன்றம் ஆகும். மணிப்பூர் மாநிலத் தலைநகரம் இம்பாலில் இதன் சட்டமன்ற வளாகக் கடடிடம் உள்ளது.
மணிப்பூர் சட்டமன்றம் 60 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. அதில் 40 உறுப்பினர்கள் இம்பால் பள்ளத்தாக்கில் பெரும்பான்மையாக வாழும் மெய்தி மக்களிலிருந்து தேர்வு செய்யப்படுகின்றனர். மீதமுள்ளவர்கள் இம்பால் நகரத்தை சுற்றியுள்ள 20 மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மலைவாழ் குகி மக்கள் மற்றும் நாகா மக்களிலிருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள்.[4][5] தற்போது மணிப்பூர் சட்டமன்றத்திற்கு பட்டியல் சமூகத்தவர் மற்றும் பழங்குடி மலைவாழ் மக்களுக்கு முறையே 1 மற்றும் 19 தொகுதிகள் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[6]