மண்ணின் மைந்தன் | |
---|---|
![]() DVD cover | |
இயக்கம் | இராம நாராயணன் |
தயாரிப்பு | இராம நாராயணன் |
திரைக்கதை | மு. கருணாநிதி |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
படத்தொகுப்பு | ராஜ் கீர்த்தி |
கலையகம் | அழகர் பிலிம்சு |
வெளியீடு | 4 மார்ச் 2005 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
மண்ணின் மைந்தன் என்பது 2005ஆவது ஆண்டில் இராம நாராயணன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சிபிராஜ், சுகா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், சத்யராஜ் சிறப்புத் தோற்றத்திலும் நடித்த இத்திரைப்படத்தை, இதன் இயக்குநர் இராம நாராயணனே தயாரித்திருந்தார். இது 2004இல் வெளியான யக்னம் என்னும் தெலுங்குத் திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.[1] இத்திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். 2005 மார்ச் 4 அன்று வெளியான இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.[2][3][4]