மது கோடா

மது கோடா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
மே 2009 – மே 2014
தொகுதிசிங்பூம்
முன்னாள் சார்க்கண்ட் முதல்வர்
பதவியில்
செப்டம்பர் 2006 - ஆகத்து 2008
முன்னையவர்அருச்சுன் முண்டா
பின்னவர்சிபு சோரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 1971 (அகவை 53)
ஜார்க்கண்ட்
அரசியல் கட்சிசுயேச்சை
வாழிடம்சார்க்கண்ட்

மது கோடா (Madhu Koda, பிறப்பு சனவரி 6, 1971) 2006 முதல் 2008 வரை ஜார்கண்ட் மாநில முதல்வராக பணியாற்றிய ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். செப்டம்பர் 18, 2006 இல் ஜார்கண்ட் மாநிலத்தின் ஐந்தாவது முதலமைச்சராக பொறுப்பேற்ற மது கோடா ஆகத்து 23, 2008இல் தாம் அப்பதவியிலிருந்து விலகும் வரை பணியாற்றினார். சிபு சோரன் இவரை அடுத்து முதல்வராக பொறுப்பேற்றார்.

ஓர் இந்திய மாநிலத்தின் முதல்வராக சுயேச்சை ஒருவர் இவ்வாறு பொறுப்பேற்பது மூன்றாவது முறையாக அமைந்தது. இதற்கு முன்னர் 1971ஆம் ஆண்டில் ஒரிசாவில் பிசுவநாத் தாசும் 2002இல் மேகாலயாவில் எஸ். எஃப். கோங்கலமும் இவ்வாறு சுயேச்சைகளாக இருந்து முதலமைச்சர் பொறுப்பாற்றியவர்கள்.

தற்போது நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பிணை விண்ணப்பங்கள் மறுக்கப்பட்ட நிலையில் சிறையில் உள்ளார்.[1].[2]

மேற்கோள்கள்

[தொகு]