மது மன்சூரி அசுமுக் | |
---|---|
பிறப்பு | 4 செப்டம்பர் 1948 சிமிலியா, ராஞ்சி, பீகார் (தற்போது சார்க்கண்டு), இந்தியா |
பணி | பாடகர், பாடலாசிரியர், சமூக செயற்பாட்டாளர் |
பெற்றோர் | அப்துல் ரஹ்மான் மன்சூரி (தந்தை) |
வாழ்க்கைத் துணை | சாமியா ஓரான் |
விருதுகள் |
|
மது மன்சூரி அசுமுக் (Madhu Mansuri Hasmukh)(பிறப்பு: செப்டம்பர் 4, 1948) என்பவர் ஓர் இந்தியப் பாடகரும், பாடலாசிரியரும் ஆர்வலரும் ஆவார். இவர் சார்க்கண்டு தனி மாநில இயக்கத்திற்காகப் பல நாக்புரி பாடல்களை எழுதிப் பாடியுள்ளார்.[1][2] 2011ஆம் ஆண்டில், சார்க்கண்டு அரசு இவருக்கு சார்க்கண்டு இரத்னா விருதை வழங்கியது.[3] 2020ஆம் ஆண்டில், கலைத்துறையில் பத்மசிறீ விருதைப் பெற்றார்.[4]
மது மன்சூரி அசுமுக் 1948-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி ராஞ்சி மாவட்டத்தில் உள்ள சிமிலியாவில் பிறந்தார். இவரது தந்தை பெயர் அப்துல் இரகுமான் மன்சூரி.[5] மது மன்சூரியின் கூற்றுப்படி, இவருடைய மூதாதையர்கள் ஓரான் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டனர். இவர் சாமியா ஓரானை மணந்தார்.[3]
அசுமுக் மீகானில் இயந்திர இயக்குநராக இருந்தார். இவர் தனது தந்தையிடமிருந்து பாரம்பரியப் பாடலைக் கற்றுக்கொண்டார். இவர் சிறு வயதிலிருந்தே பாடல்களைப் பாடத் தொடங்கினார். இவர் 1960-ஆம் ஆண்டு தனது பன்னிரண்டு வயதில் மேடையில் முதல் பாடலைப் பாடினார். இவர் 1960-இல் சிசுட் மஞ்சை நிறுவினார். மேலும் இவரது முதல் நாக்புரி பாடல்களின் புத்தகம் வெளியிடப்பட்டது. 1972-ஆம் ஆண்டு இவர் "நாக்பூர் கர் கோரா" பாடலை எழுதினார். 1992-ஆம் ஆண்டு, இவர் இராம் தயாள் முண்டா, முகுந்த் நாயக்குடன் தைவானுக்குப் பயணம் செய்தார்.[5] தனி சார்க்கண்டு மாநிலத்திற்கான இயக்கத்திற்காக இவர் பல நாக்புரி பாடல்களை எழுதிப் பாடியுள்ளார்.[3]
சார்க்கண்டு அரசு இவருக்கு சார்க்கண்டு பிபூதி விருதை வழங்கியது. 2011-ஆம் ஆண்டில், சார்க்கண்டு அரசு இவருக்கு சார்க்கண்டு இரத்னா விருதை வழங்கியது. 2020-ஆம் ஆண்டில், கலைத்துறையில் பத்மசிறீ விருதைப் பெற்றார்.