மது யாதவ் (Madhu Yadav) இந்தியப் பெண்கள் தேசிய வளைகோல் பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவியாவார்.[1] இந்தியன் இரயில்வே அணிக்காக விளையாடிய இவர் இந்தியாவுக்காக வீர்ர், தலைவர், பயிற்சியாளர் என அனைத்து நிலைகளிலும் பங்கேற்றுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் சபல்பூரைச் சேர்ந்தவரான இவர்[2] 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.[3] ஓய்வுக்குப் பிறகு இவர் சில காலம் அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார்.[4] 2000 ஆம் ஆண்டு இவருக்கு அருச்சுனா விருது வழங்கப்பட்டது.[5] இந்திய வளைகோல் பந்தாட்ட மேலாண்மைக் குழுவின் உறுப்பினராகவும் மது யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.