மதுசூதன் யாதவ்

மதுசூதன் யாதவ்
நகரத்தந்தை, ராஜ்நந்தகாவுன்
பதவியில்
15 சனவரி 2015 – 2 சனவரி 2020
பின்னவர்கேமா தேசுமுக்
நாடாளுமன்ற உறுப்பினர்-இந்திய நாடாளுமன்றம்
பதவியில்
மே 2009 – மே 2014
முன்னையவர்தேவ்ரத் சிங்
பின்னவர்அபிசேக் சிங்
தொகுதிராஜ்நந்தகாவுன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மதுசூதன் யாதவ்

22 ஆகத்து 1970 (1970-08-22) (அகவை 54)[1]
ராஜ்நந்தகாவுன், சத்தீசுகர்.[1]
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி.[1]
துணைவர்கருணா[1]
பிள்ளைகள்02
பெற்றோர்துர்கா பிரசாத் (தந்தை) & தாகிய தேவி (தாய்).[1]
வாழிடம்ராஜ்நந்தகாவுன் & புது தில்லி.[1]
கல்விமேல்நிலைக் கல்வி[1]
வேலைஅரசியல்வாதி, விவசாயி & வணிகம்

மதுசூதன் யாதவ் (Madhusudan Yadav) பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சத்தீசுகரின் ராஜ்நந்தகாவுன் மக்களவைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் 15ஆவது மக்களவை உறுப்பினராக இருந்தவர் ஆவார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

யாதவ் 2009 இந்திய பொதுத் தேர்தலில் 100,000 வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியத் தேசிய காங்கிரசின் தேவ்வ்ரத் சிங்கை தோற்கடித்து 15ஆவது மக்களவைக்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 2015-இல், இவர் ராஜ்நந்தகான் மாநகராட்சியின் தலைவராக ஆனார். இவர் 2018 சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தலில் டோங்கர்கான் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்தியத் தேசிய காங்கிரசின் தலேஷ்வர் சிங் சாகுவிடம் தோற்றார்.

திசம்பர் 2011-இல், மதுசூதன் யாதவ் முன்மொழியப்பட்ட ஜன் லோக்பால் மசோதாவின் கீழ் தொகுதி சி ஊழியர்களைச் சேர்க்க வேண்டும் என்று வாதிட்டார்.[3]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]