மதுவும் மார்பகப் புற்றுநோயும்

குறைந்த அளவே மது அருந்துவதும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணியே
   மது அருந்துதல் கூடுதல் அபாயம்[1][2]
   மார்பகப் புற்றுநோய்க்கு உறுதியான சாத்தியம் (=100%)

மது மற்றும் மார்பகப் புற்றுநோய் (Alcohol and breast cancer) இடையே உள்ள தொடர்பு தெளிவாக உள்ளது: ஆல்ககால் கலந்துள்ள எந்தவகையான மதுபானங்களை அருந்துவதும் மார்பக புற்றுநோய் மற்றும் வேறு சில வகையான புற்றுநோய்க்கான ஆபத்து விளைவிக்கும் ஒரு காரணியாகும்.[3] [4][5][6] மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 100,000 பேருக்கும் அதிகமானவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது. [6] உலகளவில் பாதிக்கப்பட்டுள்ள மார்பக புற்றுநோயின் 10 நிகழ்வுகளில் ஒன்று பெண்கள் மது அருந்துவதால் ஏற்படுவதாகவே உள்ளது. [6] மதுபானங்களை குடிப்பது மிகவும் பொதுவான மாற்றிக் கொள்ளக்கூடிய ஆபத்து காரணிகளில் ஒன்றாகும். [7]

பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயை உண்டாக்கும் குழு 1 புற்றுநோய் காரணியாக மதுபானங்களை வகைப்படுத்த போதுமான அறிவியல் சான்றுகள் இருப்பதாக புற்றுநோய்க்கான பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. [5] குழு 1 புற்றுநோய் காரணிகள் என்பவை நிச்சயமாகப் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்கள் என்பதற்கான தெளிவான அறிவியல் ஆதாரங்களை கொண்டுள்ள புகையிலை போன்ற பொருள்களை குறிப்பவையாகும். ஒரு நாளைக்கு சராசரியாக ஓர் அலகு மது அருந்தும் ஒரு பெண்ணை விட, சராசரியாக இரண்டு அலகு மது அருந்தும் பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் உருவாக்கும் அபாயம் 13% அதிகமாகும்.[1] வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குறைந்த அளவு மது அருந்தினாலும் கூட மார்பக புற்றுநோய் தோன்றும் அபாயம் அதிகமே.[6]

மது அருந்தாதவர்கள் மற்றும் குறைந்த அளவு மது அருந்துபவர்களை விட அதிகமாக குடிப்பவர்கள் மார்பக புற்றுநோயால் இறப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், ஒரு பெண் எவ்வளவு அதிகமாக தொடர்ந்து மது அருந்துகிறாரோ, அந்த அளவுக்கு ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகும் அவருக்கு மீண்டும் மீண்டும் புற்றுநோய் வருவதும் தொடரும்.[8]

இயக்கமுறை

[தொகு]

ஆல்ககால் அருந்துவதன் மூலம் மார்பக புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது என்பதை விளக்குவதற்கான வழிமுறைகள் தெளிவாக இல்லை, என்றாலும் இவையாக அவை இருக்கலாம்:

  • ஈசுட்ரோசன் எனப்படும் பெண்மை இயக்கு நீரும், ஆண்ட்ரோசன் எனப்படும் ஆண்மை இயக்கு நீரும் அதிகரிப்பது[9]
  • பாலூட்டி சுரப்பி மேம்படுவது[9]
  • பாலூட்டி டி.என்.ஏ. சேதம் அதிகரிப்பது[9]
  • மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் அதிக நோய்திசு பரவுகை திறன்[9]

இவற்றின் அளவு ஆல்ககால் உட்கொள்ளும் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது.[9] போலேட் குறைபாடு போன்ற உணவுக் குறைபாடுகள், இயக்குநீர் மாற்று சிகிச்சையின் பயன்பாடு போன்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், மூளைகட்டி உயிரணுக்களில் இயக்குநீர் ஏற்பி வெளிப்பாடு போன்ற உயிரியற் பண்புகளும் கூட மார்பகப் புற்றுநோய்க்கான ஆல்ககால் வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும்.[9]

மிதமான குடிபழக்கம்

[தொகு]
Diagram of different sizes, showing how big a single serving of alcohol is for different types of alcoholic beverages
பியர் உட்பட அனைத்து வகையான மதுபான வகைகளும் மார்பகப் புற்றுநோயை உருவாக்கும்.

மதுபானங்களை அருந்துவது மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. மிகக்குறைவாக குடிப்பவர்களுக்கும் இந்த ஆபத்து நிச்சயம்[1] என்றாலும் அதிக அளவில் குடிப்பவர்களிடையே ஆபத்து அதிகமாக உள்ளது.[10] இலேசான குடிப்பழக்கம் என்பது வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று முறை மது அருந்துவதாகும். மிதமான குடிப்பழக்கம் என்பது ஒரு நாளைக்கு ஒரு முறை மது அருந்துவதாகும். இலேசான மற்றும் மிதமான குடிப்பழக்கம் மார்பக புற்றுநோயைக் கண்டறியும் அபாயத்துடன் தொடர்புடையது. மிதமான குடிப்பழக்கத்தால் ஏற்படும் ஆபத்து அதிகமாக குடிப்பதால் ஏற்படும் அபாயத்தை விட சிறியது.[6][11]

குடிக்கும் தாய்களின் மகள்களுக்கு

[தொகு]

கர்ப்ப காலத்தில் மது அருந்துவது பெண் குழந்தைகளுக்கு மார்பக புற்றுநோயின் வாய்ப்பை அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. "கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிதமான அளவில் கூட மதுவை உட்கொள்வது, மெலடோனின் குறைப்பு அல்லது வேறு சில வழிமுறைகள் மூலம் ஈசுட்ரோசன் அளவை உயர்த்துவதற்கு வழிவகுக்கலாம். இது வளரும் பாலூட்டி திசுக்களை பாதிக்கும். அதாவது மகள்களுக்கு வாழ்நாள் முழுவதும் மார்பக புற்றுநோயின் அபாயம் இருந்துகொண்டே இருக்கும்.[12]

மறுநிகழ்வு

[தொகு]

மது அருந்துவது அல்லது குடிக்காமல் இருப்பது மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வருமா என்பதை தீர்மானிக்காது. இருப்பினும் ஒரு பெண் எவ்வளவு அதிகமாக குடிக்கிறாரோ அந்த அளவுக்கு புற்றுநோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.[8]

ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய்

[தொகு]

ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோயானது அரிதானது.[13] 100,000 ஆண்களில் ஒருவருக்கும் குறைவான நிகழ்வுகளே ஏற்படுகின்றன.[14] மக்கள்தொகை ஆய்வுகள் அதிக அளவு மது அருந்துவது ஆபத்து காரணி என கலவையான முடிவுகளை அளித்துள்ளது. தினசரி மது அருந்துதல் 10 கிராம் அளவு என்றால் ஆபத்து சதவீதம் 16% என்ற விகிதம் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.[15] மற்றவை எந்த விளைவையும் காட்டவில்லை. இருப்பினும் இந்த ஆய்வுகள் குடிகாரர்களின் சிறிய எண்ணிக்கையை மட்டுமே கொண்டிருந்தன.[16]

தொற்றுநோயியல்

[தொகு]

உலகளவில் மது அருந்துவதால் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 144,000 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.[6] ஒவ்வோர் ஆண்டும் சுமார் 38,000 பெண்கள் மதுவால் தூண்டப்பட்ட மார்பக புற்றுநோயால் இறக்கின்றனர்.[6] இவர்களில் 80% பெண்கள் அதிகமாகவோ அல்லது மிதமாகவோ குடிப்பவர்களாக இருந்தார்கள்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Choi, Yoon-Jung; Myung, Seung-Kwon; Lee, Ji-Ho (2017-05-22). "Light Alcohol Drinking and Risk of Cancer: A Meta-Analysis of Cohort Studies". Cancer Research and Treatment 50 (2): 474–487. doi:10.4143/crt.2017.094. பன்னாட்டுத் தர தொடர் எண்:2005-9256. பப்மெட்:28546524. பப்மெட் சென்ட்ரல்:5912140. https://pubmed.ncbi.nlm.nih.gov/28546524. 
  2. Bagnardi, V.; Rota, M.; Botteri, E.; Tramacere, I.; Islami, F.; Fedirko, V.; Scotti, L.; Jenab, M. et al. (2015-02-03). "Alcohol consumption and site-specific cancer risk: a comprehensive dose-response meta-analysis". British Journal of Cancer 112 (3): 580–593. doi:10.1038/bjc.2014.579. பன்னாட்டுத் தர தொடர் எண்:1532-1827. பப்மெட்:25422909. பப்மெட் சென்ட்ரல்:4453639. https://pubmed.ncbi.nlm.nih.gov/25422909. 
  3. "மது குடிப்பதால் உண்டாகும் 7 வகை புற்றுநோய்: ஆராய்ச்சியில் தகவல்". BBC News தமிழ். 2016-07-22. பார்க்கப்பட்ட நாள் 2022-02-06.
  4. Hayes, J.; Richardson, A.; Frampton, C. (November 2013). "Population attributable risks for modifiable lifestyle factors and breast cancer in New Zealand women". Internal Medicine Journal 43 (11): 1198–1204. doi:10.1111/imj.12256. பன்னாட்டுத் தர தொடர் எண்:1445-5994. பப்மெட்:23910051. 
  5. 5.0 5.1 Alcohol consumption and ethyl carbamate International Agency for Research on Cancer Working Group on the Evaluation of Carcinogenic Risks to Humans (2007: Lyon, France) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789283212966
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 6.7 Shield, Kevin D.; Soerjomataram, Isabelle; Rehm, Jürgen (June 2016). "Alcohol Use and Breast Cancer: A Critical Review". Alcoholism, Clinical and Experimental Research 40 (6): 1166–1181. doi:10.1111/acer.13071. பன்னாட்டுத் தர தொடர் எண்:1530-0277. பப்மெட்:27130687. 
  7. "Alcohol Intake and Breast Cancer Risk: Weighing the Overall Evidence". Current Breast Cancer Reports 5 (3): 208–221. September 2013. doi:10.1007/s12609-013-0114-z. பப்மெட்:24265860. 
  8. 8.0 8.1 Gou, YJ; Xie, DX; Yang, KH; Liu, YL; Zhang, JH; Li, B; He, XD (2013). "Alcohol Consumption and Breast Cancer Survival: A Meta-analysis of Cohort Studies.". Asian Pacific Journal of Cancer Prevention 14 (8): 4785–90. doi:10.7314/APJCP.2013.14.8.4785. பப்மெட்:24083744. "Although our meta-analysis showed alcohol drinking was not associated with increased breast cancer mortality and recurrence, there seemed to be a dose-response relationship of alcohol consumption with breast cancer mortality and recurrence and alcohol consumption of >20 g/d was associated with increased breast cancer mortality.". 
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 "Alcohol and breast cancer: review of epidemiologic and experimental evidence and potential mechanisms". JAMA 286 (17): 2143–51. 2001. doi:10.1001/jama.286.17.2143. பப்மெட்:11694156. 
  10. "Alcohol Use and Breast Cancer: A Critical Review". Alcoholism, Clinical and Experimental Research 40 (6): 1166–81. June 2016. doi:10.1111/acer.13071. பப்மெட்:27130687. "All levels of evidence showed a risk relationship between alcohol consumption and the risk of breast cancer, even at low levels of consumption.". 
  11. "Alcohol consumption and breast cancer risk in the Women's Health Study". Am J Epidemiol 165 (6): 667–76. March 2007. doi:10.1093/aje/kwk054. பப்மெட்:17204515. 
  12. "Alcohol exposure in utero and breast cancer risk later in life". Alcohol and Alcoholism 36 (3): 276–7. 2001. doi:10.1093/alcalc/36.3.276. பப்மெட்:11373268. 
  13. "புற்றுநோய்த் தலைநகரமாகும் சென்னை; புகையிலை, மதுவை ஒழிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-02-06.
  14. Male Breast Cancer
  15. Guénel, P.; Cyr, D.; Sabroe, S.; Lynge, E.; Merletti, F.; Ahrens, W.; Baumgardt-Elms, C.; Ménégoz, F. et al. (Aug 2004). "Alcohol drinking may increase risk of breast cancer in men: a European population-based case-control study". Cancer Causes & Control 15 (6): 571–580. doi:10.1023/B:CACO.0000036154.18162.43. பன்னாட்டுத் தர தொடர் எண்:0957-5243. பப்மெட்:15280636. 
  16. Brinton, A.; Richesson, A.; Gierach, L.; Lacey Jr, R.; Park, Y.; Hollenbeck, R.; Schatzkin, A. (Oct 2008). "Prospective evaluation of risk factors for male breast cancer". Journal of the National Cancer Institute 100 (20): 1477–1481. doi:10.1093/jnci/djn329. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8874. பப்மெட்:18840816. 

புற இணைப்புகள்

[தொகு]