மத்திய இந்திய முகமை | ||||||
பிரித்தானிய இந்தியாவின் அரசியல் முகமை | ||||||
| ||||||
| ||||||
![]() | ||||||
வரலாறு | ||||||
• | பிரித்தானிய இந்திய அரசியல் முகமைகள் இணைக்கப்பட்டது. | 1854 | ||||
• | 1947 இந்திய விடுதலை | 1947 | ||||
பரப்பு | ||||||
• | 1881 | 1,94,000 km2 (74,904 sq mi) | ||||
Population | ||||||
• | 1881 | 92,61,907 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | 47.7 /km2 (123.7 /sq mi) | |||||
![]() |
மத்திய இந்திய முகமை (Central India Agency) பிரித்தானிய இந்தியாவின் முகமைகளில் ஒன்றாகும். 1854-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த முகமையின் தலைமையிடம் இந்தூர் நகரம் ஆகும். 1881-ஆம் ஆண்டில் இம்முகமை 1,94,000 சதுர கிலோ மீட்டர் (74,904 சதுர மைல்) பரப்பளவும், 92,61,907 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.
இம்முகமை மத்திய இந்தியாவில் உள்ள சுதேச சமஸ்தானங்களின் ஆட்சி அரசியலை மேற்பார்வையிடுவதுடன், ஆண்டு தோறும் சுதேச சமஸ்தானங்களிடமிருந்து திறை வசூலிப்பதாகும். இம்முகமையின் நிர்வாகி, பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநரின் கீழ் செயல்படுவார்.
1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் மத்திய இந்திய முகமை கலைக்கப்பட்டது. 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி, மத்திய இந்திய முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. புந்தேல்கண்ட் முகமை மற்றும் பகேல்கண்ட் முகமையின் பகுதிகள் புதிதாக நிறுவப்பட்ட விந்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. மால்வா முகமை, குவாலியர் முகமை மற்றும் இந்தூர் முகமைகளை புதிதாக நிறுவப்பட்ட மத்திய பாரதம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. போபால் முகமையை மட்டும் போபால் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, விந்தியப் பிரதேசம் மற்றும் மத்திய பாரதம் பகுதிகளை, புதிதாக நிறுவப்பட்ட மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து, 1 நவம்பர் 2000 அன்று சத்தீசுகர் மாநிலம் உருவாக்கப்பட்டது.
26°13′N 78°10′E / 26.22°N 78.17°E