மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு
நிறுவனம் மேலோட்டம்
வகைஒழுங்குமுறை ஆணையம்
தலைமையகம்புது தில்லி, இந்தியா
ஆண்டு நிதி3,358 கோடி (US$420 மில்லியன்) (2021 - 2022) [1]
அமைச்சர்
நிறுவனம் தலைமை
  • மரு. இராஜே சிங் ரகுவன்சி, இந்திய தலைமை மருந்து கட்டுபாட்டாளர்
மூல நிறுவனம்இயக்குநர், பொது மருத்துவ சேவைகள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா)
வலைத்தளம்cdsco.gov.in and www.cdscoonline.gov.in

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organisation) என்பது அழகுசாதனப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவச் சாதனங்களுக்கான இந்தியாவில் செயல்படும் தேசிய ஒழுங்குமுறை அமைப்பாகும். இது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்திற்கு ஒத்த செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. உள்வைப்புகள் மற்றும் கருத்தடை உட்பட அனைத்து மருத்துவச் சாதனங்களையும் மத்திய மருந்துகள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் மதிப்பாய்வின் கீழ் கொண்டு வரும் திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பினுள், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைமையின் கீழ் மருந்து மற்றும் மருத்துவச் சாதனங்களை ஒழுங்குபடுத்தப்படுகிறது. இந்த அமைப்பு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் வருகின்றது. மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு மற்றும் மருந்து ஆலோசனைக் குழு ஆலோசனை வழங்குகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் செயல்படும் மண்டல அலுவலகங்கள் மருந்து உரிமத்திற்கு முந்தைய மற்றும் உரிமத்திற்குப் பிந்தைய ஆய்வுகள், சந்தைக்குப் பிந்தைய கண்காணிப்பு மற்றும் போதைப்பொருள் திரும்பப் பெறுதல் (தேவைப்படும் இடங்களில்) ஆகிய பணியினை மேற்கொள்கின்றன. இந்தியாவில் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளிலும் இந்தியப் பிரதிநிதி மருந்து உற்பத்தியாளர்கள் பங்காற்றுகின்றனர்.

பிரிவுகள்

[தொகு]

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு 8 பிரிவுகளைக் கொண்டுள்ளது.

  • உயிரிக்குக் கிடைக்கும் தன்மை/உயிரி சமநிலை[2]
  • புதிய மருந்துகள்[3]
  • மருத்துவச் சாதனமும் நோயறிதலும்[4]
  • மருந்து ஆலோசனைக் குழு-மருந்துகளின் தொழில்நுட்ப ஆலோசனை ஆணையம்[5]
  • இறக்குமதி மற்றும் பதிவு [6]
  • உயிரியல் தொடர்பானவை [7]
  • அழகுசாதனப் பொருட்கள் [8]
  • மருத்துவப் பரிசோதனைகள் [9]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Datasets - Open Budgets India".
  2. "BA/BE". cdsco.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-29.
  3. "New Drugs". cdsco.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-29.
  4. "Medical device & diagnostics". cdsco.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-29.
  5. "DTAB-DCC". cdsco.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-29.
  6. "Imports & Registration". cdsco.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-29.
  7. "biologicals". cdsco.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-29.
  8. "cosmetics". cdsco.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-29.
  9. "Committees". cdsco.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-29.

வெளி இணைப்புகள்

[தொகு]