மத்திய வறண்டநில வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (Central Research Institute for Dryland Agriculture) அல்லது சி.ஆர்.ஐ.டி.ஏ என்பது இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் ஆகும். இது 1985ஆம் ஆண்டில் வறண்ட நிலத்தில் விவசாயத்திற்கான அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தின் திட்ட இயக்கமாக உருவாக்கப்பட்டது.[1] குறைந்த மழைப்பொழிவுப் பகுதிகளில் விவசாய ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டது.[2] இதன் தலைமையகம் ஐதராபாத்திலும், நாடு முழுவதிலும் 25 திட்ட மையங்களுடனும் செயல்படுகிறது.