மத்தியமாவதி (Madhyamavati) இராகம் 22வது மேளகர்த்தா இராகமாகிய "வேத" என்றழைக்கப் படும் 4வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய கரகரப்பிரியாவின்ஜன்ய இராகம் ஆகும். தேவாரப் பண்களில், செந்துருத்தி என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.[1] இது பாடவேண்டிய காலம் நண்பகல் ஆயினும், மிகவும் சுபகரமான இராகமானதால் இதை எப்போதும் பாடலாம்.
இந்த இராகத்தை கச்சேரி, பஜனை, காலஷேபம், நாடகம் முதலிய நிகழ்ச்சிகளின் இறுதியில் பாடி முடிக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகின்றது. பல்வேறு இராகங்களைக் கேட்பதன் மூலமாக பல்வேறு இரச உணர்ச்சிகள் நமக்கு ஏற்படுகின்றன.