மந்தா ஜெகநாத்

மந்தா ஜெகநாத்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1999-2008 (தெலுங்கு தேசம் கட்சி), 2008-2013 (இந்திய தேசிய காங்கிரசு), 2013-2014 (பாரத் இராட்டிர சமிதி)
தொகுதிநாகர்‌கர்னூல்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 மே 1951 (1951-05-22) (அகவை 73)
இந்தியாவிலுள்ள நகரங்களின் பட்டியல், தெலங்காணா
அரசியல் கட்சிபாரத் இராட்டிர சமிதி
துணைவர்எம். சாவித்திரி
பிள்ளைகள்2 மகன்களும், 1 மகளும்
வாழிடம்ஐதராபாத்து
As of 16 செப்டம்பர், 2006
மூலம்: [1]

'மருத்துவர் மந்தா ஜெகநாத் (Manda Jagannath) (பிறப்பு; 22 மே 1951) ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர், நாகர்கர்னூல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவின் 11, 13, 14 மற்றும் 15வது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். தற்போது இவர் பாரத் இராட்டிர சமிதி கட்சியில் இருக்கிறார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

மந்தா ஜெகநாதம் தெலங்காணா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் பிறந்தார். உசுமானியா பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் பட்டம் பெற்றுள்ளார். மருத்துவப் பட்டம் பெற்ற பிறகு மகபூப்நகர் மற்றும் ஐதராபாத்தில் மருத்துவராகப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 உறுப்பினர்களில் ஒருவராகவும், அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழுவிலும் இருந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது கட்சிக்கு எதிராக வாக்களிக்க காங்கிரசு கட்சியிடமிருந்து தொகை வாங்கியதற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கட்சி முடிவுக்கு எதிராக வாக்களித்ததற்காக சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியால் இவர் மக்களவையில் இருந்து வெளியேற்றப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் காங்கிரசில் சேர்ந்து 2013 வரை கட்சியில் இருந்தார். 2008 இல் புது தில்லியில் ஆந்திரப் பிரதேச அரசின் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். தெலங்கானா போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் 2013இல் பாரத் இராட்டிர சமிதி கட்சியில் இணைந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Manda Jagannadham: Latest News, Videos and Photos | Times of India". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-02.

வெளி இணைப்புகள்

[தொகு]