மனதின் குரல் (இந்தி: मन की बात (Mann Ki Baat),(மொ.பெ. Inner Thoughts) என்பது இந்திய வானொலி நிகழ்ச்சியாகும்.
மனதின் குரல் | |
---|---|
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சிக்காக மக்களுடன் உரையாடும் காட்சி | |
நடிப்பு | நரேந்திர மோடி (2014 – தற்போது வரை) இந்தியப் பிரதமர் |
நாடு | இந்தியா |
மொழி | மூலவுரை: இந்தி (மொழிபெயர்க்கப்பட்ட பிற மொழிகள்):
|
அத்தியாயங்கள் | 79 (25 சூலை 2021 முடிய) |
ஒளிபரப்பு | |
ஒளிபரப்பான காலம் | 3 அக்டோபர் 2014 |
வெளியிணைப்புகள் | |
[pmonradio |
இந்த வானொலி நிகழ்ச்சியின் மூலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 3, 2014 முதல் தொடர்ந்து நாட்டு மக்களுடன் அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்சன் தேசியக் தொலைக்காட்சி மற்றும் தூர்தர்ஷன் செய்தி தொலைக்காட்சிகள் மூலம் நாட்டு மக்களிடையே மாதம் ஒரு முறை உரையாற்றுகிறார். இந்தி மொழியில் வெளியாகும் மனதின் குரல் நிகழ்ச்சியை இந்தி மொழி அறியாத மக்கள் கேட்கும் பொருட்டு, உடனடியாக அனைத்து 29 முக்கிய இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்படுகிறது.[1][2][3] மனதின் குரல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் "அன்றாட நிர்வாகத்தின் பிரச்சினைகள் குறித்து குடிமக்களுடன் ஒரு உரையாடலை ஏற்படுத்துவதாகும்"[4][5]
வரிசை எண் | ஆண்டு | தேதி | |
---|---|---|---|
1 | 2014 | 3 அக்டோபர் | |
விஜயதசமி வாழ்த்து தெரிவித்த பின்னர், ஏழைகளின் செழிமைக்கு பங்களிக்க காதி ஆடைகளை வாங்குமாறு கேட்போரை மோடி வலியுறுத்தினார். தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) பற்றி விவாதித்தார். இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் வெற்றி (Mars Orbiter Mission) , திறன் மேம்பாடு மற்றும் ஊனமுற்ற குழந்தைகள் குறித்தும் அவர் விவாதித்தார். நாட்டின் குடிமக்கள் தனக்கு எழுதிய பல்வேறு கடிதங்கள் மற்றும் யோசனைகள் குறித்தும் மோடி விவாதித்தார். | |||
2 | 2014 | 2 நவம்பர் | |
ஊனமுற்ற குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் அத்தகைய குழந்தைகளுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான கல்வி நிறுவனங்களுக்கு மானியங்கள் உட்பட பல அரசு முயற்சிகள் குறித்து மோடி விவாதித்தார். சுகாதாரத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் (Swachh Bharat Abhiyan) நேர்மறையான விளைவுகள் குறித்தும் அவர் விவாதித்தார்.சியாச்சின் பனியாறு (Siachen Glacier) பகுதிக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி கார்கில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார் மற்றும் 1999 கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். முதல் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டதற்குப் பிறகு காதியின் விற்பனை எவ்வாறு அதிகரித்தது என்பதையும் மோடி விவாதித்தார். | |||
3 | 2014 | 14 டிசம்பர் | |
போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்து விவாதித்த மோடி, போதைப்பொருள் வேண்டாம் என்று இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். போதைப்பொருளுக்காக செலவிடப்படும் பணமானது பயங்கரவாதத்திற்கு நிதியாதாராமாக பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவ கட்டணமில்லா தொலைப்பேசி இலக்கம் அமைக்கப்படும் என்று அவர் கூறினார். அனைவருக்கும் கிருத்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மோடி தெரிவித்தார். |
வரிசை எண் | ஆண்டு | தேதி | |
---|---|---|---|
4 | 2015 | 27 சனவரி | |
இந்த நிகழ்ச்சியை மோடியுடன் இணைந்து அமெரிக்க அதிபர் ஒபாமா தொகுத்து வழங்கினார். "இந்தியப் பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் இணைந்து நிகழ்த்தும் முதல் வானொலி உரை இது" என்று தன்னிடம் கூறப்பட்டதை ஒபாமா குறிப்பிட்டார். இந்திய குடிமக்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்தனர். #YesWeCan என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ஆன்லைனில் எழுதுமாறு கேட்போரை மோடி வலியுறுத்தினார். | |||
5 | 2015 | 22 பிப்ரவரி | |
மாணவர்களிடம் பேசிய மோடி, தேர்வினால் ஏற்படும் மன அழுத்தத்தைத் தவிர்க்கவும், மற்றவர்களுடன் அல்லாமல், தங்களுடன் போட்டியிடவும் கேட்டுக் கொண்டார். "இது (தேர்வு) வாழ்க்கையின் முடிவாகப் போவதில்லை, கல்வித் தேர்வுகளை விட வாழ்க்கை மிகப் பெரியது" என்றார். மேலும் தங்கள் குழந்தையின் செயல்திறனை மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம் என்று பெற்றோரை வலியுறுத்தினார். | |||
6 | 2015 | 22 மார்ச் | |
மண்ணின் ஆரோக்கியம், விளைச்சலுக்கான சரியான மதிப்பு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் போன்ற விவசாயிகளின் கவலைக்குரிய பிரச்சினைகள் குறித்து மோடி விவாதித்தார்.சமீபத்திய நிலச் சட்டம் பற்றிய பல தவறான புரிதல்களை அவர் தெளிவுபடுத்தினார்.மேலும், இந்திய விவசாயிகள் அவரிடம் எழுப்பிய பல கவலைகள் மற்றும் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும் விதமாக உரையாற்றினார். | |||
7 | 2015 | 26 ஏப்ரல் | |
பாபா சாகேப் அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்தினார் என்பதை நினைவு கூர்ந்தார் மோடி. இன்றும் ஏழைகள், நமது தலித், பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் பெரும் பகுதியினர் கல்வியில் பின்தங்கியுள்ளனர். இந்த வகுப்பினரிடையேயும் பெண்களே அதிகம் என்றும் பாபா சாஹேப்பின் 125 வது ஆண்டு விழாவில், ஒவ்வொரு ஆண் மற்றும் பெண் குழந்தைகளும் கல்வியை தருவோம் என்று உறுதிமொழி ஏற்போம் என்று கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு கிராமம், நகரம் மற்றும் ஏழைகளின் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று வழியுறுத்தினார். அரசாங்கங்கள் தங்கள் வேலையைச் செய்கின்றன, ஆனால் மக்களின் முயற்சியும் சேர்ந்தால், முடிவுகள் திருப்திகரமாக இருக்கும் எனக் கூறினார். | |||
8 | 2015 | 31 மே | |
'ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' (One rank One Pension) பிரச்சனைக்கு அரசு விரைவில் தீர்வு காணும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.நாட்டில் வறுமையை ஒழிக்க தனது அரசு எடுத்துள்ள புதிய முயற்சிகள் குறித்து அவர் விரிவாகப் பேசினார்.பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இந்தியாவுக்கு உதவும் தொழிலைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத்தினார்.[6] | |||
9 | 2015 | 28 சூன் | |
சர்வதேச யோகா தினத்தின் வெற்றி குறித்து பேசிய பிரதமர், அரசின் 'பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' (Beti Bachao Beti Padhao) என்ற திட்டத்தை வலுப்படுத்தும் வகையில், மக்கள் தங்கள் மகள்களுடன் 'செல்பி' (selfie) எடுத்து இணையத்தில் வெளியிடுமாறு அழைப்பு விடுத்தார். மழைநீரைச் சேமிப்பதன் அவசியம் குறித்துப் பேசினார் பிரதமர் மோடி. மழைநீரை சேமிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். மழைநீரை சேமிப்பதன் மூலம், ஆண்டு முழுவதும் நாம் நன்மையை பெறமுடியும் என்பதை சுட்டிக்காட்டினார்.[7] | |||
10 | 2015 | 26 சூலை | |
சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கியத்துவத்தை குடும்பத்தில் உள்ள இளைஞர்களுக்கு தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல, ஒவ்வொரு குடும்பத்தின் கடமை என்று கூறினர் பிரதமர் மோடி[8] நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒருவர் சாலை விபத்தில் இறக்கிறார் என்பதை தெளிவுபடுத்தினார்.[8] கார்கில் போர் எல்லையில் மட்டும் நடத்தப்படவில்லை, இந்தியாவின் ஒவ்வொரு கிராமங்களும், நகரங்களும் அதற்காக பங்களித்துள்ளன என்று விவரித்தார். கார்கில் போரில் உயிர்நீத்த அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும், அவர்களின் தியாகம் மற்றும் வீரத்திற்காக, கார்கில் வெற்றி நாளை முன்னிட்டு வணக்கம் செலுத்தினார். ஒவ்வொரு கிராமத்திற்கும் வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதை எடுத்துரைத்தார். ஒவ்வொருவரும் கர்ம யோகி ஆக வேண்டும் என்று ஊழியர்களை கேட்டுக்கொண்டார். மாணவர்கள் வளரும்போது என்ன ஆக வேண்டும் என்று கேட்டால், 100 ல் ஒருவர் விஞ்ஞானி ஆக விரும்புவதாக கூறுகின்றனர் என்பதை விவரித்தார்.[9] | |||
11 | 2015 | 30 ஆகஸ்ட் | |
ஜன்தன் யோஜனா , 1965 போர், இந்திய விஞ்ஞானிகள் செய்து வரும் அற்புதமான பணிகள், தூய்மை இந்தியா இயக்கம் (स्वच्छ भारत अभियान) மற்றும் விவசாயிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மோடி விவாதித்தார்.[10] | |||
12 | 2015 | 20 செப்டம்பர் | |
ஓராண்டு மனதின் குரல் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி.சுபாஷ் சந்திரபோஸ் பற்றியும், இந்திய சுதந்திர வானொலியை (Azad Hind Radio) போஸ் எவ்வாறு துவக்கினார் என்பதை பற்றியும் மோடி பேசினார்.திரவ பெட்ரோலிய வாயு (LPG Gas) மானியங்களின் அமைதியான புரட்சியையும் அவர் குறிப்பிட்டார்.[11] | |||
13 | 2015 | 25 அக்டோபர் | |
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. பல்வேறு சாதிகள், மதங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் இந்த பன்முகத்தன்மை நம் நாட்டின் பலம். நாட்டின் பன்முகத்தன்மை குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே செய்தி. அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை ஆகியவை வளர்ச்சிக்கான ஆதாரங்கள் என விவரித்தார் பிரதமர் மோடி.உறுப்பு தானத்தின் முக்கியத்துவம், முக்கியத்தும் மற்றும்[12]தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் (Gold Monetization Schemes) ஆகியவை குறித்து விவரித்தார்.[13][14] | |||
14 | 2015 | 29 நவம்பர் | |
நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் ‘ஏக் பாரத், ஷ்ரேஷ்ட் பாரத்’ திட்டத்தை செயல்படுத்த முன்மொழிவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.[15][16] Gov.Com [17] என்ற இணையதளத்தின் அமைப்பு மற்றும் அதன் சின்னம் ஆகியன எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும், பொதுமக்களின் பங்களிப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் மக்கள் ஆலோசனைகளை வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.[15] | |||
15 | 2015 | 27 டிசம்பர் | |
{{cite web}}
: CS1 maint: url-status (link)