தனிநபர் தகவல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 21 அக்டோபர் 1960 ஒற்றத்தை, கண்ணூர் மாவட்டம், கேரளம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | தடகளம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | 400 மீட்டர் தடை ஓட்டப்போட்டி | |||||||||||||||||||||||||||||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | 100 மீ தடை ஓட்டம்: 14.02 (ஜகார்த்தா 1985) 400 மீ தடை ஓட்டம்: 57.81 (1985) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
மனத்தூர் தேவசிய வல்சம்மா அல்ல்து எம். டி. வல்சம்மா (21 அக்டோபர் 1960) ஒரு ஓய்வு பெற்ற இந்திய விளையாட்டு வீரராவர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் விளையாட்டில் தங்கப்பதக்கத்தை வென்ற இரண்டாவது மற்றும் இந்திய மண்ணில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி ஆவர்.
வல்சம்மா கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒற்றத்தை எனும் சிற்றூரில் பிறந்தார். பள்ளி நாட்களில் தனது தடகள வாழ்க்கையைத் தொடங்கி இருந்தாலும் மேற்படிப்புக்காக பாலக்காட்டில் உள்ள மெர்சி கல்லூரிக்குச்[1] சென்ற பின்னரே தடகளப் போட்டிகளில் முனைப்புடன் பங்கேற்கத் தொடங்கினார். 1979 ஆம் ஆண்டில் புனேவில் நடந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் கேரளாவின் சார்பில் பங்குபெற்று 100 மீட்டர் தடை ஓட்டங்களிலும், பென்டத்லானிலும் தன் முதல் பதக்கத்தை வென்றார்.
அவர் தென்னக இரயில்வேயில் சேர்ந்தார். பின் ஏ.கே. குட்டி என்பவரிடம் பயிற்சி பெற்றார். 1981 ஆம் ஆண்டு பெங்களுரில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற்று ஐந்து தங்கப்பதக்கங்களை வென்றார். 400 மீட்டர் பிளாட், 400 மீ மற்றும் 100 மீ தொடர் ஓட்டம், 400 மீ மற்றும் 100 மீ தடை ஓட்டம் ஆகிய ஐந்து போட்டிகளில் இவர் காட்டிய செயல்திறன், அவரை இரயில்வே மற்றும் தேசிய அணிகளுக்குள் அழைத்துச் சென்றது. 1982 ஆம் ஆண்டில் 400 மீட்டர் தடை ஒட்டத்தில் தேசிய சாம்பியன் ஆனார். இது ஒரு புதிய சாதனையாகவும் ஆசிய சாதனையை விடச் சிறந்ததாகவும் அமைந்தது.
1982ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டி ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய மண்ணில் இந்திய மற்றும் ஆசிய வரலாற்றில் முதன்முதலாக 400 மீ தடை ஓட்டத்தை 58.47 வினாடிகளில் கடந்து தங்கம் வென்று சாதனை படைத்தார். கமல்ஜித் சிந்துவிற்கு (400 மீ - 1974) பிறகு இந்தியாவிற்குத் தங்கப்பதக்கத்தை வென்றவரானார்.
இந்திய அரசு 1982 ஆம் ஆண்டில் அவருக்கு அர்ஜுனா விருதும்,[2] 1983ல் பத்மஸ்ரீ விருதும்[3] வழங்கியது. கேரள அரசு ஜி.வி.ராஜா ரொக்க விருதும் வழங்கி சிறப்பித்தது.
வரலாற்றில் முதல்முறையாக, இந்திய பெண்கள் அணி 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டியில் நுழைந்து ஏழாவது இடம் பெற்றது. வல்சம்மா 100 மீ தடைகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். 100 மீ தடைகளில் தங்கம் வென்ற அவர் 1985 ஆம் ஆண்டில் முதல் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தேசிய சாதனையைப் படைத்தார்.