மனம் | |
---|---|
இயக்கம் | விக்ரம் குமார் |
தயாரிப்பு | அக்கினேனி குடும்பம் |
கதை | ஹரீஷவர்தணா (உரையாடல்) |
திரைக்கதை | விக்ரம் குமார் |
இசை | அனுப் ருபின்ஸ் |
நடிப்பு | அக்கினேனி நாகேஸ்வர ராவ் அக்கினேனி நாகார்ஜுனா அக்கினோனி நாக சைதன்யா சிரேயா சரன் சமந்தா அக்கினோனி |
ஒளிப்பதிவு | பி. எஸ். விதோத் |
படத்தொகுப்பு | பிரவீன் புடி |
கலையகம் | அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் |
விநியோகம் | ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் |
வெளியீடு | 23 மே 2014[1] |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹280 மில்லியன்[2] |
மொத்த வருவாய் | ₹365 மில்லியன்[3] |
மனம் (Manam (தமிழ்ப் பொருள்: நாம்) என்பது 2014 ஆண்டைய இந்திய தெலுங்கு நாடகத் திரைப்படமாகும். படத்தை அன்னபூரணா பதாகையின்கீழ் அக்கினேனி குடும்பம் தயாரித்துள்ளது. படத்தின் எழுத்து & இயக்கத்தை விக்ரம் குமார் செய்துள்ளார். படத்தில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் தனது உண்மையான மகன் & பேரன் போன்றோரான அக்கினேனி நாகார்ஜுனா, நாக சைதன்யா ஆகிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் சிரேயா சரன், சமந்தா ருத் பிரபு ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு அனுப் ரூபன்ஸ் இசையமைத்துள்ளார். அமிதாப் பச்சன், அமலா அக்கினேனி, மற்றும் நாகார்ஜுணாவின் இளைய மகன் அக்கினோனி அகில் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் இவர்களுடன் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படமானது பல்வேறு காலங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது, 2013 க்கு முன்பு நூறு ஆண்டுகள் வரையிலான காலம் வரை கதை செல்கிறது, இதில் மறுபிறப்பு மற்றும் மாறாத அன்பு ஆகிய கருத்தாக்கங்களைக் கொண்டுள்ளது. படத்தில் நாகார்ஜுனாவின் மொத்தக்குடும்பத்தையும் தாத்தாவை பேரனாகவும், அப்பாவை மகனாகவும், மகனை அப்பாவாகவும் நகைச்சுவையுடன் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
இந்தப் படம் ₹280 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்டது. படத்துக்கான உரையாடல்களை ஹர்ஷவர்தன் எழுதியுள்ளார். படத்துக்கான இசையை அனுப் ருபென்ஸ் அமைக்க, பி. எஸ். வினோத் படத்தின் ஒளிப்பதிவை மேற்கோண்டுள்ளார். படத்தயாரிப்பானது 2013 சூன் 3 இல் துவங்யது. முதன்மை ஒளிப்பதிவு 2013 சூன் 7 அன்று துவங்கி ஐதராபாத், குடகு மற்றும் மைசூர் ஆகிய பகுதிகளைச் சுற்றி 2014 நடு ஏப்ரல் வரை நடந்தது.
மனம் திரைப்படமானது நாகேசுவர ராவின் கடைசிப் படமாகும். படத்தின் தயாரிப்புக் காலத்திலேயே அவர் 2014 சனவரி 22 அன்று இறந்தார். இந்தத் திரைப்படம் உலகளாவிய அளவில் 2014 மே 23 அன்று விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்று வெளியிட்டு, வணிக ரீதியாக வெற்றியும் பெற்றது. இது ₹365 மில்லியனை வசூலித்தது. இப்படம் 45வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 2014 நவம்பர் 29 அன்று திரையிடப்பட்டது. இந்தத் திரைப்படம் சிறந்த தெலுங்குத் திரைப்படத்துக்கான பிலிம்ஃபேர் விருதைப் பெற்றது.
2013 இல் கதை நடப்பதாக காட்டப்பட்டு 1920களின் வரை பின் நினைவுக் கதையாகப் படம் செல்கிறது. மகனின் பிறந்தநாள் விழாவில் ஆரம்பிக்கும் கதை. அப்பா நாக சைதன்யா, அம்மா சமந்தா இவர்களுக்குள் கருத்து வேறுபாடு பிரச்சினை. ஒரு கட்டத்தில் மகன் அடிப்பட்ட விஷயம் அறிந்து வேகமாக மகிழுந்தை ஓட்ட விபத்தில் இருவரும் இறக்கிறார்கள். அந்த மகன் வளர்ந்து நாகார்ஜுனாவாக பெரிய தொழிலதிபர் ஆகிறார்.
எதேச்சையாக விமானத்தில் போகும்போது தனது தந்தை சைதன்யாவைப்போல் ஒரு இளைஞனைப் பார்க்க அவனைத் தன் அன்புப்பிடிக்குள் கொண்டுவருகிறார். அதேமாதிரி தன் அம்மாவைப்போல் இருக்கும் சின்னப்பெண் சமந்தாவை அம்மா அம்மா என்று அன்புகாட்டி சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் காதல் வர திட்டம் போடுகிறார்.
நாகார்ஜுனா மகிழுந்தில் போகும்போது சாலையில் விபத்து ஏற்பட்டதைப் பார்க்க அதற்குள் ஷிரேயா வந்து அந்தப் பெரியவரை காப்பாற்றச் சொல்லி இவரின் மகிழுந்தில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்கள். அங்கு குணமடையும் பெரியவர் நாகார்ஜுனாவையும், ஷ்ரேயாவையும் பார்த்து இவர்கள் தன் இறந்துப்போன அப்பா, அம்மா மாதிரி இருப்பதை பார்த்து மகிழ படம் 1920களுக்கு பின் நினைவுக் கதையாக செல்கிறது. இறுதியில் இவர்கள் அனைவரும் இணைந்தார்களா என்பதைக் கடைசி 5 நிமிட பரபரப்பில் காட்டியிருக்கிறார் இயக்குநர் விக்ரம் குமார்.
{{cite web}}
: Italic or bold markup not allowed in: |publisher=
(help)
{{cite web}}
: Italic or bold markup not allowed in: |publisher=
(help)