மனு பரேக்

மனு பரேக்
பிறப்பு1939 (அகவை 84–85)
அகமதாபாத், குசராத்து, இந்தியா
பணிஓவியர்
வாழ்க்கைத்
துணை
மாதவி பரேக்
விருதுகள்பத்மசிறீ
லலித் கலா அகாதமி விருது
பிர்லா கலை மற்றும் கலாசார அகாதாமி விருது
அகில இந்திய கவின் கலைகள் மற்றும் கைவினைச் சங்கம் விருது
வெள்ளிப் பதக்கம்- இந்தியக் குடியரசுத் தலைவர்

மனு பரேக் (Manu Parekh ) இவர் ஓர் இந்திய ஓவியர் ஆவார். வாரணாசி நகரத்தில் பல ஓவியங்களுக்கு பெயர் பெற்றவர். இரவீந்திரநாத் தாகூர் மற்றும் ராம் கிங்கர் பைஜ் ஆகியோரால் தாம் ஈர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பரேக், 1982 லலித் கலா அகாதமி விருதைப் பெற்றவர். [1] 1991ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதினை வழங்கியது. [2]

சுயசரிதை

[தொகு]

பரேக் 1939ஆம் ஆண்டில் இந்திய மாநிலமான குசராத்தில் அகமதாபாத்தில் பிறந்தார் [1] 1962இல் மும்பையின் சர் ஜாம்செட்ஜி ஜீஜிபாய் கலைப்பள்ளியில் கலையில் இளங்கலை பட்டம் பெற்றார். [3] அங்கு முகுந்த் ஷிராப்பின் கீழ் பயிற்சி பெறும் வாய்ப்பும் கிடைத்தது. [4] பின்னர் இவர் தேசிய நாடகப் பள்ளியிலும் சிறிது காலம் குறுகியகாலப் பயிற்சி பெற்றார். [5] நாடக அரங்கங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், ஒரு வருடம் நடிகராகவும் மேடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றினார். 1963ஆம் ஆண்டில் மும்பையின் பூபுல் செயக்கரின் நெசவு அருங்காட்சியத்தில் கலை வடிவமைப்பாளராக சேர்ந்தார். அங்கு இவர் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். இவர் 1965ஆம் ஆண்டில் கொல்கத்தாவுக்கு தனது தளத்தை மாற்றினார். 1974இல் புதுதில்லிக்குச் சென்று, கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி ஏற்றுமதி நிறுவனத்தின் வடிவமைப்பு ஆலோசகராக சேர்ந்தார். இவர் ஒரு சுயாதீனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடர பின்னர் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

பரேக் பல குழு கண்காட்சிகளில் பங்கேற்றினார். அவற்றுள் 1982 இல் தேசிய நவீன கலைக்கூடத்தில் நடைபெற்ற நவீன ஓவிய கண்காட்சி, அதே ஆண்டு வாஷிங்டன் டி.சி.யின் சிமித்சோனிய நிறுவனத்தில் நடைபெற்ற ஹிர்ஷோம் மியூஸ் கண்காட்சி மற்றும் ஏழு கலைஞர்கள் எனும் பயணக் கண்காட்சி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. [6]

இத்தாலி மற்றும் டென்மார்க்கில் நடைபெற்ற மதுபானி ஓவியக் கண்காட்சியிலும் 1987 இல் ஸ்டாக்ஹோமில் நடந்த இந்திய விழாவில் தற்கால இந்திய ஓவியம் கண்காட்சியிலும் ஆணையராக பணியாற்றியுள்ளார். [7] 1971ஆம் ஆண்டின் பிர்லா கலை மற்றும் கலாச்சார அகாடமியின் விருதுக்குப் பிறகு, இவர் அகில இந்திய நுண்கலை மற்றும் கைவினை சங்கம் விருதையும் 1972இல் இந்தியக் குடியரசுத்தலைவரின் வெள்ளி தகட்டையும் பெற்றார். [8] அகில இந்திய நுண்கலை மற்றும் கைவினை சங்க விருது 1974ஆம் ஆண்டில் மீண்டும் இவருக்கு அளிக்கப்பட்டது. 1982 இல், லலித் கலா அகாடமியிடமிருந்து தேசிய கலை விருதைப் பெற்றார். [4] கொல்கத்தாவின் பிர்லா கலை மற்றும் கலாச்சார அகாதமி 1991இல் வரை மீண்டும் கௌரவித்தது. மேலும் அதே ஆண்டு இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது. [2]

பரேக் பிரபல சமகால கலைஞரான மாதவி என்பவரை மணந்தார். இந்த இணை புதுதில்லியில் 1987 முதல் வாழ்ந்து வருகிறது. [4]

மேலும் காண்க

[தொகு]


குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Saffronart profile". Saffronart. 2015. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
  2. 2.0 2.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  3. 4.0 4.1 4.2 "Contemporary Indian Art profile". Contemporary Indian Art. 2015. Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Encapsulating Manu Parekh's life and art". he Arts Trust. 2015. Archived from the original on 3 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Professional Artists". India Art. 2015. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
  6. "Indian Art Circle profile". Indian Art Circle. 2015. Archived from the original on 16 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]