மனோஜ் குமார் பராசு | |
---|---|
![]() அகிலேசு யாதவுடன் மனோஜ் குமார் பராசு | |
சட்டமன்ற உறுப்பினர், 18ஆவது சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மார்ச் 2022 | |
முன்னையவர் | Self |
தொகுதி | நகினா |
சட்டமன்ற உறுப்பினர், 16ஆவது சட்டமன்றம் | |
பதவியில் மார்ச் 2017 – மார்ச் 2022 | |
முன்னையவர் | ஓம்வதி தேவி |
பின்னவர் | Self |
தொகுதி | நகினா |
சட்டமன்ற உறுப்பினர், 17ஆவது சட்டமன்றம் | |
பதவியில் மார்ச் 2012 – மார்ச் 2017 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 சூன் 1967 பின்ஷாஹேட், பிஜ்னோர் மாவட்டம், உத்தரப்பிரதேசம் |
குடியுரிமை | இந்தியர் |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
துணைவர் | நீலம் சிங் பராசு (தி. 1994) |
பிள்ளைகள் | 1 |
வாழிடம் | பிஜ்னோர், உத்தரப்பிரதேசம் |
தொழில் | விவசாயம், அரசியல் |
மனோஜ் குமார் பராசு (Manoj Kumar Paras) என்பவர் இந்திய அரசியல்வாதி உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். சமாஜ்வாதி கட்சியினைச் சார்ந்த இவர் உத்தரப்பிரதேசத்தின் நகினா சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2][3]
பராசு 1967ஆம் ஆண்டு சூன் 14ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள பின்ஷாஹேட்டில் அமர் சிங் ரவிக்கு மகனாகப் பிறந்தார். இடைநிலை வரை பள்ளிக் கல்வியினைக் கற்றுள்ளார். பராசு 17 ஏப்ரல் 1994-ல் நீலம் சிங் பராசை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர் விவசாயம் செய்துவருகிறார்.[4]
மனோஜ் குமார் பராசு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் நகினா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஆவார். சமாஜ்வாதி கட்சி அரசியல் கட்சியின் உறுப்பினராக உள்ளார். பராசு உத்தரப்பிரதேச அரசில் அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரை மார்ச் 9, 2014 அன்று, அகிலேஷ் யாதவ் "கட்சி விரோத நடவடிக்கைகள்" காரணமாக அமைச்சர் பதிவிலிருந்து நீக்கம் செய்தார்.[1]
2017 தேர்தலில் இவர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஓம்வதி தேவியை 7,967 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5] 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பராசு 26451 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் யசுவந் சிங்கினைத் தோற்கடித்தார்.
# | முதல் | வரை | பதவி | கருத்துகள் |
---|---|---|---|---|
01 | மார்ச் 2012 | மார்ச் 2017 | உறுப்பினர், 16வது சட்டமன்ற உறுப்பினர் | |
02 | 2012 | 2014 | அமைச்சர், முத்திரை மற்றும் சிவில் பாதுகாப்பு | மார்ச் 2014-ல் அகிலேஷ் யாதவ் இவரை பதவியிலிருந்து நீக்கினார். |
03 | மார்ச் 2017 | மார்ச் 2022 | உறுப்பினர், 17வது சட்டமன்ற உறுப்பினர் | |
04 | மார்ச் 2022 | பதவியில் | உறுப்பினர், 18வது சட்டமன்ற உறுப்பினர் | [6] |