மனோஜ் பாரதிராஜா | |
---|---|
![]() | |
பிறப்பு | மனோஜ் பாரதிராஜா 11 செப்டம்பர் 1976 கம்பம், தேனி, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | மார்ச்சு 25, 2025 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 48)
இறப்பிற்கான காரணம் | இதய நிறுத்தம் சிறுநீரகச் செயலிழப்பு |
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1999– 2025 |
பெற்றோர் | பாரதிராஜா சந்திரலீலா |
வாழ்க்கைத் துணை | நந்தனா |
பிள்ளைகள் | 2 |
மனோஜ் பாரதிராஜா (Manoj Bharathiraja, 11 செப்டம்பர் 1976 – 25 மார்ச்சு 2025) தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர் ஆவார். இவர் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் ஆவார்.[1]
மனோஜ் நடிகர் ஆவதற்கு முன்பு தமிழ்த் திரையுலகில், உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பொம்மலாட்டம் திரைப்படத்தில் தனது தந்தையின் உதவியாளராகப் பணியாற்றினார். இவர் தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் நாடகக் கலைகளைப் பயின்றுள்ளார்.[2]
மனோஜ் 1999 ஆம் ஆண்டு தாஜ்மஹால் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இந்தத் திரைப்படத்தை பாரதிராஜா இயக்கினார். இவருக்கு இணையாக ரியா சென் நடித்தார். இந்தத் திரைப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது. இருப்பினும் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த படத்தின் பாடல்களும் பின்னணி இசையும், விமர்சகர்கள், பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றன. அதைத் தொடர்ந்து, மனோஜ் சரத்குமார், முரளி ஆகியோருடன் இணைந்து சமுத்திரம் திரைப்படத்திலும், தனது தந்தை இயக்கிய கடல் பூக்கள் படத்திலும் தோன்றினார். பிந்தைய படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தாலும், விமர்சகர் பாராட்டைப் பெற்றது. இதற்காக பாரதிராஜாவுக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது. பின்னர் அவர் சரணின் அல்லி அர்ஜுனாவில் முன்னணி வேடத்தில் நடித்தார். அதன் பிறகு, குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன் ஆகிய படங்களில் நடித்தார். அவை வணிக வெற்றி பெறவில்லை. பின்னர், இவர் சத்யராஜின் மகா நடிகன் படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்தார். வெளியிடப்படாத தெலுங்கு படமான லெமனில் எதிர்மறை வேடத்திலும் நடித்திருக்கிறார்.[3]
மனோஜ் தன் தந்தையின் படமான ஃபைனல் கட் ஆஃப் டைரக்டர் படத்திலும், பிரபல திரைப்படப் படைப்பாளியான மணிரத்னத்தின் படங்களிலும் உதவியாளராகப் பணியாற்றினார். 2008 முதல் 2010 வரை, இயக்குனர் எஸ். ஷங்கரின் பிரமாண்டமான படைப்பான எந்திரனில் உதவியாளராகப் பணியாற்றினார்.[4] 2007 முதல், மனோஜ் தனது தந்தையின் சிகப்பு ரோஜாக்கள் படத்தை மறு ஆக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தப் படம் இன்னும் முன் தயாரிப்பில் உள்ளது. 2012 ஆம் ஆண்டில், இவரது தந்தை தனது தயாரிப்பான அன்னக்கொடியும் கொடிவீரனும் திரைப்படத்தில் எதிர்மறைப் பாத்திரத்தில் நடிக்க அமீருக்குப் பதிலாக இவரை ஒப்பந்தம் செய்தார். இதன் மூலம் ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2023 இல் மார்கழி திங்கள் படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார்.[5]
இவர் 2006 நவம்பர் 19 அன்று, தனது காதலியான நடிகை நந்தனாவைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்த்திகா, மதிவதனி என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஆண்டு | தலைப்பு | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1999 | தாஜ்மகால் | மாயன் | |
2001 | சமுத்திரம் | சின்னராசு | |
கடல் பூக்கள் | பீட்டர் | ||
2002 | அல்லி அர்ஜுனா | அறிவழகன் | |
வருஷமெல்லாம் வசந்தம் | ராஜா | ||
2003 | பல்லவன் | பல்லவன் | |
ஈரநிலம் | துரைசாமி | ||
2004 | மகா நடிகன் | முத்து | |
2005 | சாதுரியன் | ||
2013 | அன்னக்கொடி | சடையன் | |
2015 | பேபி | சிவா | |
கதிர்வேல் காக்க | வேல்ராஜ் | ||
வாய்மை | மணிபாரதி | ||
2016 | என்னமா கதவுடுறானுங்க | அவராகவே | கௌரவக் கதாபாத்திரம் |
2019 | சாம்பியன் | கோபி | |
2021 | ஈஸ்வரன் | (இளைய) பெரியசாமி | |
மாநாடு | யான் மேத்தியூ | ||
2022 | விருமன் | முத்துக்குட்டி |
மனோஜ் மாரடைப்பால், 2025 மார்ச்சு 25 அன்று காலமானார்.[6][7]