மனோஜ் மிசுரா Manoj Misra | |
---|---|
நீதிபதி-இந்திய உச்ச நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 6 பிப்ரவரி 2023 | |
பரிந்துரைப்பு | தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் |
நியமிப்பு | திரௌபதி முர்மு |
நீதிபதி-அலகாபாத் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 21 நவம்பர் 2011 – 5 பிப்ரவரி 2023 | |
பரிந்துரைப்பு | எசு. எச். கபாதியா |
நியமிப்பு | பிரதிபா பாட்டில் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 சூன் 1965 |
முன்னாள் கல்லூரி | அலகாபாத் பல்கலைக்கழகம் |
மனோஜ் மிசுரா (பிறப்பு: சூன் 2, 1965) இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார்.
மனோஜ் மிசுரா 1988-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். பின்னர் 12 திசம்பர் 1988-ல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். இவர் உரிமையியல், வருவாய், குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு விடயங்களில் சட்டப் பயிற்சி செய்தார். இவர் 21 நவம்பர் 2011 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவியேற்றார். பின்னர் 6 ஆகத்து 2013 அன்று நிரந்தர நீதிபதியானார்.[1][2] பிப்ரவரி 6, 2023 ஆம் நாள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.[3]
{{cite web}}
: Missing or empty |title=
(help)