மனோஜ் முகுந்த் நரவானே | |
---|---|
முப்படைகளின் தலைமைப் படைத்தலைவர் (தற்காலிகம்) | |
தற்காலிகம் | |
பதவியில் 15 டிசம்பர் 2021 | |
குடியரசுத் தலைவர் | ராம் நாத் கோவிந்த் |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | பிபின் இராவத் |
27வது இந்தியத் தரைப்படை தலைமைத் தளபதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 டிசம்பர் 2019 | |
குடியரசுத் தலைவர் | ராம் நாத் கோவிந்த் |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | பிபின் இராவத் |
40வது இந்தியத் தரைப்படையின் துணை தலைமைத் தளபதி | |
பதவியில் 1 செப்டம்பர் 2019 – 31 டிசம்பர் 2019 | |
குடியரசுத் தலைவர் | ராம் நாத் கோவிந்த் |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | தேவராஜ் அன்பு |
பின்னவர் | சத்திந்தர் குமார் சைனி[1] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 ஏப்ரல் 1960[2] புனே, மகாராட்டிரம், இந்தியா |
துணைவர் | வீணா நரவானே |
Military service | |
பற்றிணைப்பு | இந்தியா |
கிளை/சேவை | இந்தியத் தரைப்படை |
சேவை ஆண்டுகள் | சூன், 1980– 30 ஏப்ரல் 2022 |
தரம் | ஜெனரல் |
அலகு | 7வது சீக்கிய லைட் தரைப்படை |
கட்டளை | |
இராணுவச் சேவை எண் | IC-38750H |
விருதுகள் | |
ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே (Manoj Mukund Naravane) (பிறப்பு: 22 ஏப்ரல் 1960) 27வது இந்தியத் தரைப்படைத் தலைவர் ஆவார். மேலும் இவர் தற்காலிகமாக 15 டிசம்பர் 2021 முதல் முப்படைகளின் தலைமைப் படைத்தலைவராகவும் உள்ளார்.[3] நரவானே சீக்கிய லைட் படையணியின் 7வது பட்டாலியனில் சூன் 1980இல் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இவர் பிபின் இராவத் ஓய்வுக்கு பிறகு 31 டிசம்பர் 2019 அன்று இந்தியத் தரைப்படைத் தலைவராக பதவியேற்றார். இவர் முன்னர் கிழக்கு மண்டல கட்டளை அதிகாரி, இராணுவப் பயிற்சி கட்டளை அதிகாரி, 2வது கூர்க்கா படையணி, அசாம் ரைபிள்ஸ், 106வது தரைப்படை அணி மற்றும் இராஷ்டிரிய ரைபிள்ஸ் படையணிகளில் கட்டளை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இவர் 30 ஏப்ரல் 2022 அன்று பணி ஓய்வு பெற்றார்.
இவர் புனே நகரத்தில் பிறந்தவர்.[4][5] இவரது தந்தை முகுந்த் நரவானே இந்திய வான்படையில் விங் காமாண்டராக பணியாற்றியவர். இவரது தாய் சுதா அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றியவர் ஆவார்.[6][7] இவருக்கு வீணா எனும் மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.