மன்சார் ஏரி | |
---|---|
![]() மன்சார் ஏரி | |
அமைவிடம் | ஜம்மு காஷ்மீர் |
ஆள்கூறுகள் | 32°41′46″N 75°08′49″E / 32.696076°N 75.146806°E |
வடிநில நாடுகள் | இந்தியா |
அலுவல் பெயர் | Surinsar-Mansar Lakes |
தெரியப்பட்டது | 8 November 2005 |
உசாவு எண் | 1573[1] |
மன்சார் ஏரி (Mansar Lake) சம்முவிலிருந்து 62 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மன்சார் ஏரி காடுகளால் சூழப்பட்ட மலைகளால் ஆன ஏரியாகும். இந்த ஏரியின் நீளம் ஓர் மைலும் அகலம் அரை மைலுமாக உள்ளது. சுரின்சார்-மன்சார் ஏரிகள் நவம்பர் 2005 இல் ராம்சார் சாசன இடங்களாக அறிவிக்கப்பட்டன.
சம்முவில் பிரபலமான சுற்றுலா தலமாகத் இருப்பது மட்டுமல்லாமல், இந்த ஏரி, புனித தளமாகவும் உள்ளது. இது மனசரோவர் ஏரியின் புராணத்தையும் புனிதத்தையும் பகிர்ந்து கொள்கிறது. ஏரியின் கிழக்குக் கரையில் ஆதிசேடன் (ஆறு தலைகளைக் கொண்ட ஒரு பாம்பு) சன்னதி ஒன்று உள்ளது. இந்த ஆலயம் பெரிய கற்பாறையை உள்ளடக்கியது. இங்குப் பல இரும்புச் சங்கிலிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை ஆதிசேசனின் சிறிய பாம்புகளைக் குறிக்கும். உமாபதி மகாதேவன் மற்றும் நரசிம்மாவின் இரண்டு பழங்கால கோயில்களும் துர்காவின் கோயிலும் மன்சார் ஏரிக்கு அருகில் அமைந்துள்ளன. பண்டிகை காலங்களில் மக்கள் ஏரியின் நீரில் புனித நீராடுகிறார்கள்.
புதுமணத் தம்பதிகள் ஏரியைச் மூன்று முறை சுற்றி வந்து (பரிகரம்) பாம்புகளின் அதிபதியான கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஆதிசேடனின் அருள் பெறுவதை நம்பிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இந்துக்களின் சில சமூகங்கள் தங்கள் ஆண் குழந்தைகளின் முண்டன் விழாவை (முதல் முடி இறக்குதலை) இங்குச் செய்கின்றனர்.
ஏரியின் கரையில் சில பழங்கால கோயில்களும் உள்ளன. இக்கோயில்களுக்குப் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றன. படகு சவாரிக்கும் மன்சார் சிறந்தது. சுற்றுலாத்துறை போதுமான படகு வசதிகளை வழங்கியுள்ளது.
மன்சார் ஏரியின் பால் உள்ள அனைத்து மதங்களின் நம்பிக்கையும் பாரம்பரியமும் போல இங்குள்ள தாவரங்களும் விலங்கினங்களும் புகழ் பெற்றுள்ளன. ஏரியில் அமைக்கப்பட்டபைஞ்சுதை நடைபாதை, ஒளி அமைப்பு பருவகால பறவைகள், ஆமை மற்றும் மீன்களை எளிதாகக் காணும் வகையில் அமைந்துள்ளது. புள்ளி மான், நீலான் உள்ளிட்ட மான்களின் புகலிடமாகவும் உள்ளது. நீர்ப் பறவைகளான கொக்குகள், வாத்துகள் போன்ற பறவைகளும் காணப்படுகின்றன.
குஜ்ஜர் மற்றும் பேகர்வால்களின் பாரம்பரிய உடையுடன் மற்றும் வழக்கமான தனித்துவமான வாழ்க்கை முறையை மேற்கொள்வதை மன்சார் மலைகளில் காணலாம்.
இந்த மன்சார் ஏரி சாலை முக்கிய சாலையான பதான்கோட் (பஞ்சாப்) உதம்பூர் (ஜம்மு & காஷ்மீர், ஜம்மு மாகாணம்) சாலையுடன் இணைகிறது. உதம்பூர் என்பது தேசிய நெடுஞ்சாலை 1ல் அமைந்த முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். மன்சார் அல்லது சம்பாவிலிருந்து உதம்பூர் செல்லும் குறுக்குவழி சாலை ஜம்மு நகரத் தொடாமல் கடந்து செல்கிறது. மன்சாருடன் இணைக்கப்பட்டுள்ள சிறிய சுரின்சார் ஏரி ஜம்முவிலிருந்து (பைபாஸ் சாலை வழியாக) 24 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[2] [3]