மன்செரா பாறைக் கல்வெட்டு | |
---|---|
பாறைக் கல்வெட்டின் மேல்புறக் குறிப்புகள் | |
இருப்பிடம் | மன்செரா மாவட்டம், கைபர் பக்துன்வா, பாகிஸ்தான் |
ஆயத்தொலைகள் | 34°20′0″N 73°10′0″E / 34.33333°N 73.16667°E |
பகுதி | அசோகர் கல்வெட்டுக்கள் |
வரலாறு | |
கட்டுநர் | பேரரசர் அசோகர் |
பகுதிக் குறிப்புகள் | |
இணையத்தளம் | UNESCO World Heritage Sites tentative list |
அசோகரின் மன்செரா பாறைக் கல்வெட்டு (Mansehra Rock Edicts) பேரரசர் அசோகர் நிறுவிய 14 பெரிய பாறைக் கல்வெட்டுக்களில் ஒன்றாகும். இக்கல்வெட்டு பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மன்செரா மாவட்டத்தின் தலைமையிடமான மன்செரா நகரத்தின் தொல்லியல் களத்தில் அமைந்துள்ளது.[1] இதன் தெற்கில் தொல்லியல் நகரமானபண்டைய தட்சசீலம் மற்றும் அப்போட்டாபாத் அமைந்துள்ளது.
மூன்று துண்டுகளாக சிதைந்துள்ள இப்பாறைக் கல்வெட்டில் மக்கள் பின்பற்ற வேண்டிய அறநெறிகள் குறித்து கரோஷ்டி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.[2][3] இப்பாறைக் கல்வெட்டு அமைந்த தொல்லியல் களத்தை 2004-ஆம் ஆண்டில் யுனெஸ்கோ நிறுவனம் தற்காலிக உலகப் பாரம்பரிய களமாக அறிவித்துள்ளது.[4]