மன்னன் | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. வாசு[1] |
தயாரிப்பு | பிரபு |
கதை | பி. வாசு |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் விஜயசாந்தி கவுண்டமணி குஷ்பூ மனோரமா பண்டரி பாய் விசு |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | பி. மோகன்ராஜ் |
கலையகம் | சிவாஜி புரொடக்சன்சு |
விநியோகம் | சிவாஜி புரொடக்சன்சு |
வெளியீடு | சனவரி 19, 1992[1] |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
மன்னன் (Mannan) 1992-ஆம் ஆண்டில் பி. வாசுவின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், குஷ்பு, விஜயசாந்தி, மனோரமா, பண்டரி பாய், கவுண்டமணி, விசு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் 1986இல் ராஜ்குமாரின் நடிப்பில் வெளியான அனுராகா அரலித்து என்ற கன்னட படத்தின் மீளுருவாக்கமாகும்.
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா, அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார். இந்தப் படத்தில் "அடிக்குது குளிரு" பாடல் மூலம் பின்னணிப் பாடகராக ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த பாடல் கல்யாணி ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[2][3]
மன்னன் | ||||
---|---|---|---|---|
பாடல்கள்
| ||||
வெளியீடு | 1992 | |||
ஒலிப்பதிவு | 1991 | |||
இசைப் பாணி | ஒலிச்சுவடு | |||
நீளம் | 24:59 | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | அகி மியூசிக் ஆதித்யா மியூசிக் | |||
இசைத் தயாரிப்பாளர் | இளையராஜா | |||
இளையராஜா காலவரிசை | ||||
|
# | பாடல் | Singer(s) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "ராஜாதி ராஜா" | சுவர்ணலதா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:00 | |
2. | "சண்டி ராணியே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 2:02 | |
3. | "அடிக்குது குளிரு" | எஸ். ஜானகி, ரஜினிகாந்த் | 5:16 | |
4. | "அம்மா என்றழைக்காத" | கே. ஜே. யேசுதாஸ் | 4:54 | |
5. | "கும்தலக்கடி கும்தக்லக்கடி பாட்டு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:05 | |
6. | "மன்னர் மன்னனே" | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 2:42 |
பொங்கல் பண்டிகையின் போது 15 ஜனவரி 1992 அன்று மன்னன் வெளியிடப்பட்டது . திரைப்படம் 25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.