மம்பாவ்

மம்பாவ்
Mambau
நெகிரி செம்பிலான்
மம்பாவ் நகரில் இருந்து போர்டிக்சனுக்குச் செல்லும் மலேசிய கூட்டரசு சாலை 53
மம்பாவ் நகரில் இருந்து போர்டிக்சனுக்குச் செல்லும் மலேசிய கூட்டரசு சாலை 53
Map
ஆள்கூறுகள்: 2°40′N 101°55′E / 2.667°N 101.917°E / 2.667; 101.917
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம் சிரம்பான்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
70300
மலேசியத் தொலைபேசி எண்கள்+60 631 0000
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N

மம்பாவ் (மலாய்; ஆங்கிலம்: Mambau; சீனம்: 曼巴乌) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டத்தில்; சிரம்பான் மாநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நகரம். சிரம்பான் நகரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]

மம்பாவ் நகரம் வரலாற்றுச் சிறப்புமிக்க சிரம்பான் - போர்டிக்சன் தொடருந்து வழித்தடத்தின் போக்குவரத்து மையப் புள்ளியாக விளங்கியது. அந்த தொடருந்து வழித்தடம் மலேசியாவின் மிகப் பழைமையான தொடருந்து வழித்தடங்களில் ஒன்றாகும்.[2]

பொது

[தொகு]

மாம்பாவ் நகரம் மலேசிய கூட்டரசு சாலை 53-இல் அமைந்துள்ளது, இந்தச் சாலை சிரம்பான் நகரத்தை போர்டிக்சன் சுற்றுலா நகரத்துடன் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை ஆகும். போர்டிக்சன் நகரம் மம்பாவ் நகரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.

அத்துடன் இந்த நகரம் லிங்கி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 15-ஆம் நூற்றாண்டில் ஒரு முக்கிய வணிகத் தளமாகவும், 18-ஆம் நூற்றாண்டில் ஈய வணிகத்திற்கான முக்கிய நிறுத்தமாகவும் பெயர் பெற்றது. தற்போது மாம்பாவ் நகரில் வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் சீனர்கள் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mambau, Negeri Sembilan, Malaysia". m.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 January 2024.
  2. "The Port Dickson line was opened in 1891 by the Sungei Ujong (Malay Peninsula) Railway Company. It ran from Seremban, the main town of Sungei Ujong (now Negeri Sembilan) to the wharf at Port Dickson, a distance of 25 miles. It was the 2nd oldest railway in the country, after the Taiping/ Port Weld line which opened in 1895". Great Malaysian Railway Journeys (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 January 2024.

மேலும் காண்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mambau
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்

[தொகு]