மயில்சாமி | |
---|---|
பிறப்பு | ஆர். மயில்சாமி 2 அக்டோபர் 1965 சத்தியமங்கலம், பிரிக்கப்படாத கோயம்புத்தூர் மாவட்டம், சென்னை மாநிலம் (தற்போது ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா |
இறப்பு | 19 பெப்ரவரி 2023 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 57)
பணி | நடிகர், நகைச்சுவையாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1985–2023 |
பிள்ளைகள் | அன்பு (எ) அருமைநாயகம் (மகன்) |
உறவினர்கள் | கு. பிச்சாண்டி (சம்பந்தி) ஐஸ்வர்யா (மருமகள்) |
மயில்சாமி (Mayilsamy, 2 அக்டோபர் 1965 – 19 பிப்ரவரி 2023) என்பவர் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றில் நடுவராகவும் பங்களித்துள்ளார்.[1] நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் (திரைப்படம்), கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்.
மயில்சாமி 1965 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று சத்தியமங்கலத்தில் பிறந்தார். நடகராகும் ஆசையுடன் 1977இல் சென்னைக்கு வந்தார். ஒரு உணவகத்தில் பகுதி நேர வேலையில் சேர்ந்து, திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். தாவணிக் கனவுகள் படத்தின் படப்பிடிப்பில் பாக்யராஜை சந்தித்து வாய்ப்பு கேட்டார். அவரிடம் தன் பலகுரல் திறமையைக் காட்டினார். ம. கோ. இராவின் குரலில் பேசிக்காட்டி அவரைக் கவர்ந்தார். அன்றைய நாளை அப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.[2] இரண்டாவதாக கன்னிராசி திரைப்படத்தில் கவுண்டமணியிடன் பேசி நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அவ்வப்போது சில படங்களில் நடிக்கத் துவங்கினார்.
இந்நிலையில் 1987இல் மயில்சாமியும், இலட்சுமண் சுருதி இலட்சுமணனும் இணைந்து வெளியிட்ட "சிரிப்போ சிரிப்பு" பலகுரல் நகைச்சுவை ஒலிப்பேழை பெரிய வெற்றியை ஈட்டியது. இதன்பிறகு அடுத்து வந்த பத்தாண்டுகள் உள்ளூரில் பிரபலமாக இருந்த நகைச்சுவைக் குழுவுடன் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தார்.
புத்தாயிரத்துக்குப் பிறகு விவேக்குடன் நடிகத் துவங்கியது இவரது திரைப்பட வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. அதன்பிறகு இவரின் திறமை திரைப்படங்களில் பலவகையில் வெளிப்பட்டது. பின்னர் இவர் பிரபலமான தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் வலுவான துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார். மயில்சாமி ஒரு புகழ்பெற்ற மேடைக் கலைஞர், நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நாடகக் கலைஞர், தமிழ் தொலைக்காட்சி துறையில் ஒரு பன்முக ஆளுமையாக வலம் வந்தார். மயில்சாமி தமிழ் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு? என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் நடுவராகவும் அறிமுகமானார்.
2009 அக்டோபரில், மயில்சாமி தன் மகன் அருமைநாயகம் படங்களில் நடிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்து, அவருக்கு அன்பு என்ற திரைப் பெயரை வழங்கினார்.[3] 2011 ஆம் ஆண்டு ராசு மதுரவனின் பார்த்தோம் பழகினோம் திரைப்படத்தில் அன்பு அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜோஷ்னா பெர்னாண்டோ நடித்தார் ஆனால் படம் வெளியான உடனேயே கிடப்பில் போடப்பட்டது.[4] அன்பு பின்னர் 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ராஜசேகரின் அந்த 60 நாட்கள் திரைப்படத்தில் பணியாற்றத் தொடங்கினார், இது சந்திரிகாவுடன் இணைந்து நடித்த ஒரு கற்பனை நகைச்சுவை படம். ஆனால் அந்த படம் இறுதியில் வெளியாகவில்லை.[5] அதேபோல், 2015 இல் கைவிடபட்ட மற்றொரு திரைப்படம் கொக்கு ஆகும், இதில் பாப்ரி கோஷ் உடன் அன்பு நடிக்கவிருந்தார்.[6] 2017 ஆம் ஆண்டில், பிருந்தா மற்றும் நிஹாரிகாவுடன் இணைந்து வேதமணியின் திரிபுரம் மற்றும் சுரபி திவாரி மற்றும் கோஷாவுடன் இணைந்து நடித்த ஒரு பொம்மலாட்டம் நடக்குது ஆகியவற்றின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆனால் இரண்டு படங்களிலும் முன்னேற்றமில்லை.[7][8] 2018 ஆம் ஆண்டில், எம். எப். உசைன் இயக்கிய அல்டி படத்தில் மனிஷா ஜித்துடன் நடித்தும், சிதம்பரம் ரயில்வே கேட் படத்தில் நீரஜாவுக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கினார்.[9][10]
மயில்சாமி 19 பிப்ரவரி 2023 அன்று சென்னையில் அதிகாலை மாரடைப்பால் ஏற்பட்ட இதய நிறுத்தம் காரணமாக தனது 57 வயதில் இறந்தார்.
பிப்ரவரி 18 அன்று மாலை, சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள திரு மேகநாத ஈசுவரர் கோவிலில் நடந்த மகா சிவராத்திரி பூஜையில் மயில்சாமி கலந்து கொண்டார்.பின்னர் இரவு 11 மணியளவில் கோவிலில் சிறப்பு இசை நிகழ்ச்சியை நடத்த டிரம்ஸ் சிவமணியை அழைத்தார்.அதிகாலையில் கோவிலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அவருக்கு மாரடைப்புஏற்பட்டது.அவரை ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இதய நிறுத்தம் காரணமாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது இறுதிச் சடங்கு அவரது இல்லத்தில் நடைபெற்றது. பிப்ரவரி 20 அன்று வடபழநியில் உள்ள ஏவிஎம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | அலைவரிசை |
---|---|---|---|
1996 | மர்மதேசம் (இரகசியம்) | சந்தானகிருஷ்ணன் | சன் தொலைக்காட்சி |
2003 | காமெடி டைம் | தொகுப்பாளர் | சன் தொலைக்காட்சி |
2005 | டைமுக்கு காமெடி | தொகுப்பாளர் | ஜெயா தொலைக்காட்சி |
2019 | லொல்லுபா | தொகுப்பாளர் | சன் தொலைக்காட்சி |
{{cite web}}
: Text "ஒரு நகைச்சுவை நடிகரின் அடையாளம்!" ignored (help)
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help)