மரியதாஸ் ருத்தினசாமி (1885-1977) என்பவர் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், சென்னையைச் சேர்ந்த ஒரு முன்னணி கல்வியாளர், இராஜதந்திரி, எழுத்தாளர் ஆவார்.
அப்போதைய மதராஸ் மாகாணத்தின் செகந்திராபாத், ஐதராபாத், கடலூரில் கல்வி பயின்ற இவர், ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜில் கல்வி கற்கச் சென்றார், இறுதியில் லண்டனின் கிரேஸ் இன்னில் பாரிஸ்டராக தகுதி பெற்றார். தனது அரசியல் வாழ்க்கையில் ருத்னசாமி மதராஸ் மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் மதராஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை இறந்த பின்னர் 1925 செப்டம்பரில் சட்டமன்ற அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 1926 தேர்தல் வரை இவர் அப் பதவியில் இருந்தார். பின்னர் இவர் மதராஸ் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராகவும் பின்னர் தலைவராகவும் பணியாற்றினார். பிரித்தானிய இந்தியாவின் மத்திய சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்திய விடுதலைக்குப் பிறகு மாநிலங்களவை உறுப்பினராக (1968–74) நியமிக்கப்பட்டார்.
இவர் துவக்கத்தில் நீதிக் கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்தார். அது கலைக்கப்பட்ட பின்னர் இவர் புதிதாக துவக்கபட்ட சுதந்திராக் கட்சியில் சேரும் வரை சுயேட்சையாகவே இருந்தார். [1]
1942 முதல் 1948 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தார். [2]
ராவ் பகதூர் எம். ஐ. ருத்னசாமியின் மகனான இவர் செகந்திராபாத் புனித அன்னே பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் 1903 ஆம் ஆண்டில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் மெட்ரிகுலேசன் பயின்றார். 1907 இல் ஐதராபாத்தின் நிஜாம் கல்லூரியில் பட்டம் பெற்றார். பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்தபோது, இவர் பல சந்தர்ப்பங்களில் சிறந்த சொற்பொழிவாளராக அறியப்பட்டார். மேலும் கலாச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். 1907 ஆம் ஆண்டில், ஆக்ஸ்போர்டில் உள்ள இயேசு கல்லூரியில் சேர இங்கிலாந்துக்குச் சென்றார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு மாறினார். அதே நேரத்தில் அவர் கிரேஸ் இன்னில் (1907-1910) சேர்ந்தார். மேலும் 1911 இல் ஒரு பாரிஸ்டராக (பார் அட் லா) இந்தியா திரும்பினார். தனது தந்தையிடமிருந்து நிர்ப்பந்தம் இருந்தபோதிலும் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடக்கூடாது என்பதில் இவர் உறுதியாக இருந்தார்.
ருத்னசாமி 1921 இல் மதராஸ் மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஆனார். 1923 வரை இவர் அப்பதவியில் இருந்தார். 1921 ஆம் ஆண்டில், பச்சையப்பா கல்லூரியின் முதல்வர் பதவிக்கு வந்தார். இவர் அந்த கல்வி நிறுவனத்தில் அப்பதவிக்கு வந்த முதல் இந்தியர் இவர் ஆவார். இவர் 1927 வரை இப்பதவியில் இருந்தார். [3]
1925 ஆம் ஆண்டில், ருத்னசாமி மதராஸ் சட்டமன்ற அவைத் தலைவராக 40 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு ஆண்டு அப்பதவியில் இருந்தார். 132 உறுப்பினர்களைக் கொண்ட மதராஸ் சட்டமன்றத்தில் எஸ். சத்யமூர்த்தி, பனகல் அரசர், பொ. தி. இராசன், எஸ். சீனிவாச அய்யங்கர், ஆற்காடு இராமசாமி முதலியார், டாக்டர் பி. சுப்பாராயன் போன்ற அறிவுமேதைகள் இருந்தனர். ஆளுநரின் 4 உறுப்பினர் கொண்ட செயற்குழுவில் என். இ. மேஜரிபங்க்ஸ் (வருவாய்), மதராசின் கான் பகதூர் முகமது உஸ்மான் (உள்துறை), டி. இ. மோயர் (நிதி), ஏ. ஒய். ஜி காம்ப்பெல் (சட்டம்) ஆகியோர் இருந்தனர். முதலமைச்சராக பனகல் அரசர் இருக்க மேலும் இரண்டு அமைச்சர்களாக ஏ. பி. பட்ரோ மற்றும் டி. என். சிவஞானம் பிள்ளை ஆகியோர் இருந்தனர். [4] அரசியலமைப்புச் சட்டத்தில் இவரது பன்மடங்கு திறமைகளை உணரப்பட்டதால் இவர், 1927 இல் மத்திய சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1928 ஆம் ஆண்டில் மதராஸ் சட்டக் கல்லூரியின் திணைவேந்தராக நியமிக்கபட்டார். அப்பதவிக்கு வந்த முதல் இந்தியர் இவர் ஆவார். இந்த பதவியில் 1930 வரை ரூத்னசாமி இருந்தார். 1930 ஆம் ஆண்டில் ரூத்னசாமி மதராஸ் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக 12 ஆண்டுகள் (1942 வரை) இருந்தார். இன்றைய தமிழக பணியாளர் தேர்வாணையத்தின் முன்னோடியாக மதராஸ் பணியாளர் தேர்வாணையம் இருந்தது. 1929 ஆம் ஆண்டில் மதராஸ் பணியாளர் தேர்வாணையம் ஒரு சட்டத்தின் மூலம் நடைமுறைக்கு வந்தது. பணியாளர் தேர்வாணையத்தை நிறுவிய அனைத்து இராஜதானிகளிலும் முதன்மையானது என்ற தனித்துவமான மரியாதை மதராஸ் இராஜதானிக்குக் கிடைத்தது. அது மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தது. [5] மதராஸ் பணியாளர் தேர்வாணையத்திலிருந்து விடுபட்டவுடன், இவர் இருமுறை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக 1942-1948 ஆக்கபட்டார்.
ருத்னசாமி நன்கு அறியப்பட்ட ஒரு எழுத்தாளராக இருந்தார். இவர் நூலாசிரியராகவும், பத்திரிகையாளராகவும் இருந்தார். சண்டே ஸ்டாண்டர்ட், ஸ்டேட்ஸ்மேன் போன்ற தேசிய செய்தித்தாள்கள், ஸ்வராஜா போன்ற அரசியல் பத்திரிகைகள், மெட்ராஸ் மெயில் போன்ற உள்ளூர் செய்தித்தாள்களில் இவர் எழுதினார். இவர் ஆசிரியராக இருந்த பத்திரிக்கைகள் பின்வருமாறு
ருத்னஸ்வாமி நேருவின் சோசலிச கொள்கையில் நம்பிக்கை கொண்டவர் அல்ல, அவரது சோசலிச கொள்கையானது "பெர்மிட் ராஜ்" க்கு வழிவகுத்தது, இது பொருளாதார வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் அரசாங்கமே முதன்மை பங்கு வகித்தது. சுதந்திரா கட்சியின் துவக்கம் குறித்து மதராசில் 1959 சூன் 6, அன்று சி. ராஜகோபாலாச்சாரி, மினூ மசானி ஆகியோரால் அறிவிக்கப்பட்டதும். அதன் துவக்க உறுப்பினர்களில் ருத்னசாமி, என். ஜி. ரங்கா, பீல்ட் மார்ஷல் கரியப்பா, பாட்டியாலாவின் மகாராஜா ஆகியோர் இருந்தனர்.
1968 ஆம் ஆண்டில், இந்திய அரசு ருத்னசாமிக்கு இலக்கியம் மற்றும் கல்விக்கான பத்ம பூசண் விருதை வழங்கியது.[6]
ரூத்னசாமி எழுதிய நூல்களின் பட்டியில் [7]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)