புராணங்கள் மற்றும் நாட்டுப்புறவியல் பற்றிய புத்தகங்கள்
வாழ்க்கைத் துணை
இசுடீபன் ஏ. இசுகுகெர் (விவாகரத்து 1989)
பிள்ளைகள்
லாரென் இசுகுகெர் (மகள்) டேனியல் இசுகுகெர் (மகன்)[3]
மரியா மாக்தலீன் டாடர் ( Maria Magdalene Tatar ) பிறப்பு மே 13, 1945) அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர் ஆவார். சிறுவர் இலக்கியம், ஜெர்மன் இலக்கியம், நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.[4][5] இவர் ஜான் எல். லோப் ஜெர்மானிய மொழிகள் மற்றும் இலக்கியங்களின் பேராசிரியராகவும், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் மற்றும் தொன்மவியல் பட்டங்களுக்கான குழுவின் தலைவராகவும் உள்ளார். [5]
மரியா டாடரின் "மந்திரித்த வேட்டைக்காரர்கள்" என்ற கதையில் வரையப்பட்ட ஓவியம்
மரியா டாடர், ஜெர்மனியின் பிரஸ்சாத்தில் பிறந்தார். குழந்தையாக இருந்தபோது 1950 களில் இவரது குடும்பம் அங்கேரியில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தது. [6]
இவர், ஐலேண்ட் பார்க், இலினொய்சில் வளர்ந்தார். [7] 1963 இல் ஐலேண்ட் பார்க் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.