மருடி மாவட்டம் | |
---|---|
Marudi District | |
சரவாக் | |
ஆள்கூறுகள்: 4°11′0″N 114°19′0″E / 4.18333°N 114.31667°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | சிபு பிரிவு |
மாவட்டம் | மருடி மாவட்டம் |
நிர்வாக மையம் | மருடி நகரம் |
மாவட்ட அலுவலகம் | மருடி |
மாநகராட்சிகள் | மருடி மாவட்ட மன்றம் Marudi District Council |
இணையதளம் | Kanowit Administrative Division |
மருடி மாவட்டம் (மலாய் மொழி: Daerah Marudi; ஆங்கிலம்: Marudi District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சிபு பிரிவில்; ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மருடி நகரம்.[1][2]
இந்த நகரம் பாராம் ஆற்றின் (Baram River) கரையில், ஆற்றின் முகப்பில் இருந்து 100 கி.மீ. (62 மைல்) உட்பாகத்தில் உள்ளது. மிரி நிறுவப் படுவதற்கு முன்பு, மருடி நகரம், சரவாக் மாநிலத்தின் வடக்குப் பகுதியின் நிர்வாக மையமாக இருந்தது.
யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமான குனோங் முலு தேசிய பூங்காவிற்கு (Gunung Mulu National Park) நுழைவாயில் நகரமாகவும் விளங்குகிறது.
1868-ஆம் ஆண்டில் ஜேம்ஸ் புரூக்கிற்கு (James Brooke) பிறகு சார்லஸ் புரூக் (Charles Brooke) என்பவர் சரவாக்கின் புதிய ராஜாவாகப் பதவியேற்றார்.
1883 வாக்கில், புரூணையின் சுல்தான் அப்போதைய சுல்தான் அப்துல் மோமின் (Abdul Momin) என்பவர், மிரி உட்பட பாரம் பகுதியை சார்லஸ் புரூக்கிற்குக் கொடுத்து விட்டார். அந்தக் காலக் கட்டத்தில் சரவாக் மாநிலம் முழுமைக்கும் புரூணை சுல்தானகத்தின் ஆளுமையின் கீழ் இருந்தது.[3]
சரவாக்கின் நான்காவது பிரிவு உடனடியாக உருவாக்கப்பட்டது. அதற்கு மாமெர்தோ ஜார்ஜ் குரிட்ஸ் (Mamerto George Gueritz) என்பவர் முதல் ஆளுநராக (Resident of the Division) பதவியில் அமர்த்தப் பட்டார்.
1883-இல் மிரிக்கு கிழக்கே 43 கி.மீ. தொலைவில் உள்ள மருடியில் ஒரு கோட்டை கட்டப்பட்டது.[4] அதற்கு கிளாட் டவுன் (Claudetown) என்று பெயரிடப்பட்டது. 1884-இல், அது நான்காம் பிரிவின் நிர்வாக மையமாக மாறியது.
புதிய நிர்வாகத்திற்கு இரண்டு இளம் அதிகாரிகள்; 30 புரவிப்படை வீரர்கள்; மற்றும் ஒரு சில பூர்வீகக் காவலர்கள் உதவினார்கள்.[5]
1891-ஆம் ஆண்டில் சார்லஸ் ஹோஸ் (Charles Hose) என்பவர் பாராம் மாவட்டத்தின் (Resident of Baram District) ஆளுநர் ஆனார். மருடியில் இருந்த கோட்டை, ஹோஸ் கோட்டை (Fort Hose) என மறுபெயரிடப்பட்டது.