மருதானியா இசுபைரேட்டா | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | கமெலினிட்சு
|
வரிசை: | கமெலினலேசு
|
குடும்பம்: | கமெலினேசியே
|
துணைக்குடும்பம்: | கமெலினாய்டே
|
சிற்றினம்: | கமெலினே
|
பேரினம்: | மர்தானியா
|
இனம்: | மு. இசுபைரேட்டா
|
இருசொற் பெயரீடு | |
மர்தானியா இசுபைரேட்டா (L.) ஜி. புர்க்ன். | |
வேறு பெயர்கள் [2][3] | |
|
மருதானியா இசுபைரேட்டா (Murdannia spirata) என்பது பொதுவாக ஆசியப் பனித்துளி மலர் (Asiatic dewflower) [4][5] என்று அழைக்கப்படுகிறது. இத்தாவரம் வெப்பமண்டலப் பகுதியில் வளர்கின்றது. இதன் தாயகம் சீனா, இந்தியா, தென்கிழக்காசியா, மற்றும் பசிபிக் கடல் பகுதி தீவுகள் ஆகும்.[6] இத்தாவரம் தற்பொழுது ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாமாநிலத்தில் இயற்கையாக வளர்கிறது. இத்தாவரம் 1965ஆம் ஆண்டு இங்கிருந்து சேகரிக்கப்பட்டது.[7] ஆசியாவில் ஈரமான பரந்த நிலப்பகுதி மற்றும் சிற்றோடைகளில் இத்தாவரம் காணப்படுகிறது. இத்தாவரம் புளோரிடா மாநிலத்தில் பனை சதுப்புநிலம் மற்றும் ஈரமான சதுப்பு நில புல் வெளிப்பகுதியில் சேகரிக்கப்பட்டுள்ளது.
மருதானியா இசுபைரேட்டா பல்லாண்டு வாழும் சிறு செடி வகையாகும். இதன் இலைகள் ஈட்டி வடிவ முனையுடன் கூடிய நீள்வட்ட வடிவம் கொண்டவை. இத்தாவரம் பற்றி வளரும் கொடியாகும். இதன் பூக்கள் வெளிர் நீல நிறமுடையது.[8][9]