மரே எமெனோ

மரே பர்ன்சன் எமெனோ (Murray Barnson Emeneau) ( பிப்ரவரி 28, 1904 – ஆகத்து 29, 2005) அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கிலியில் மொழியியல் துறையை நிறுவிய பேராசிரியர் ஆவார்,[1] இவர் ஓர் இந்தியவியலாளர் ஆவர். இவர் அதிகம் அறியப்படாத, இலக்கிய வளம் குறைந்த திராவிட மொழிகளைக் கற்றார். தோடா, படகா, கோலாமி ஆகிய மொழிகள் தொடர்பாகவும், தமிழ், சமற்கிருதம் தொடர்பாகவும் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இளம்பருவமும் கல்வியும்

[தொகு]

எமெனோ கனடாவின் நோவா இசுகோட்டியா மாநிலத்தின் இலுனன்பேர்கு நகரத்தில் பிறந்தார். பள்ளியில் படித்தபோதே செம்மொழிகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். தல்ஃகவுசி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[2] ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் பல்லியோல் கல்லூரியில் இளங்கலை பயின்றார். பின்னர் யேல் பல்கலைக்கழகத்தில் இலத்தீன் மொழியைக் கற்பித்தார். அங்கே சமற்கிருதத்தையும் பிற இந்திய ஐரோப்பிய மொழிகளைப் படிக்கத் தொடங்கினார். யேல் பல்கலைக்கழகத்தில் இருந்த போது சமற்கிருதத்தை கற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Professor Murray Emeneau Remembered". Archived from the original on 2009-05-21. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  2. Bright, William (June 2006). "Murray B. Emeneau: 1928-2006". Language 82 (2): 411–422. doi:10.1353/lan.2006.0080. 

வெளியிணைப்புகள்

[தொகு]