மர்யோரீ ஆல் ஆரிசன் (Marjorie Hall Harrison) (செப்டம்பர் 14, 1918[1] – ஆகத்து 6, 1986) ஓர் இங்கிலாந்தில் பிறந்த அமெரிக்க வானியலாளர் ஆவார்.
இவர் 1918 செப்டம்பரில் இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காமில் பிறந்தார்.
இவர் 1947 இல் கணிதவியல் படிமம் எனும் தலைப்பில் சிகாகோவில் இருந்த சிகாகோ பல்கலைக்கழகத்தின் யெர்க்கேசு வான்காணக ஆய்வுரையினை முதல் அறிவியல் வெளியீடாக வெளியிட்டார். இப்பணி வின்மீன்கள் இயக்கங்களில் பயன்படும் எரிமங்கள் குறித்து விவாதித்த்து. சிக்கலான இயற்பியல் அமைப்புகளுக்கான விரிவானதும் துல்லியமானதுமான கணிதவியல் படிமங்களை இந்நூலே முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. ஆரிசன் சுப்பிரமணியன் சந்திரசேகர், ஜார்ஜ் காமவ்ஜி. கெல்லர் ஆகியோருடன் இணைந்து, விண்மீன் உட்கருக்களுக்கான நீரக-அருகல் சார்ந்த சமவெப்பநிலை (வெப்பநிலை மாறா)க் கணிதவியல் படிமங்களினை 1944, 1946, 1947 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்டார் சிகாகோ பல்கழகத்தில் சந்திரசேகரின் முனைவர் பட்ட ஆய்வு மாணவராகிய இவர், 1947 இல் வானியலில் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.
இவரது உடன்பிறப்பாகிய சர் ஆர்னோல்டு அலெக்சாந்தர் ஆல், அழிவு-நாள் போர்க்கலத்துக்கான கொட்புநோக்கியின் எறிபார்வைகளை வடிவமைத்தமைக்காகவும் பிராங்கு விட்டிலின் முதல் தாரைப் பொறிக்கான அமுக்கியை வடிம்வமைத்தமைக்காகவும் பெயர்பெற்றவர் ஆவார். இவர் 1954 இல் தெ ஆவிலாந்து வால்வெள்ளி மோத்ல்களைப் பற்ரியும் ஆய்வு செய்துள்ளார். இவரது மற்றொரு உடன்பிறப்பாகிய சிசுஇல் ஆல், எலி பிராங்ளின் பர்ட்டனின் மாணவரில் ஒருவர் ஆவார். இவர் 1938 இல் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முதல் நடைமுறை மின்னனியல் நுண்ணோக்கியை வடிவமைத்தார்.
இவர் 1986 ஆகத்தில் டெக்சாசில் உள்ள அண்ட்சுவில்லியில் தன் 67 ஆம் அகவையில் இறந்தார்.[2]