மறுபடியும் | |
---|---|
![]() | |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரேவதி நிழல்கள் ரவி அரவிந்த சாமி ரோகிணி |
ஒளிப்பதிவு | பாலு மகேந்திரா |
படத்தொகுப்பு | பாலு மகேந்திரா |
கலையகம் | அசுவின் இன்டர்நேசனல் |
வெளியீடு | 14 சனவரி 1993 |
ஓட்டம் | 139 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மறுபடியும் (Marupadiyum) 1993 இல் இந்தியாவில் வெளியான நாடகத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பாலுமகேந்திரா எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரேவதி, நிழல்கள் ரவி, அரவிந்த் சாமி, ரோகினி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1992 இல் வெளியான "ஆர்த்" எனும் ஹிந்தி திரைப்படத்தின் மீள் உருவாக்கமாகும். இத்திரைப்படம் துளசியின் திருமணத்தின் பின் அவள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டது. இத்திரைப்படம் விமர்சன ரீதியிலும், வியாபார ரீதியிலும் வரவேற்பைப் பெற்றது.இத்திரைப்படத்தில் துளசி எனும் வேடத்தில் நடித்தமைக்காக 41 வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் சிறந்த தமிழ்த் திரைப்பட நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.[1]
துளசி (ரேவதி), முரளிகிருஷ்ணாவை (நிழல்கள் ரவி) திருமணம் செய்திருந்தாள். தனது கணவனுக்கும் கவிதா என்பவருக்கும் இடையில் தவறான உறவு இருப்பதை அறிகிறாள். ஆனால் இருவரும் பிரிய மறுக்கின்றனர். துளசி கணவனைப் பிரிந்ததும் கௌரி சங்கர் (அரவிந்த் சாமி) எனும் வேற்று நபர் துளசிக்கு உதவுவதுடன் ஒரு நல்ல நண்பனாகவும் நடந்து கொள்கின்றான். சில காலத்தின் பிறகு மாற்றாள் கணவனை திருமணம் செய்த குற்ற உணர்ச்சியில் கவிதா மனநலம் குன்றுகிறாள். ஒரு கட்டத்தில் கவிதா முரளிகிருஷ்ணாவை தூக்கி எறிகிறாள். கௌரிசங்கர் துளசிக்கு நெருக்கமான நண்பனாக மாற அதன்பின்னர் தன்னைத் திருமணம் செய்ய வேண்டுகிறான். ஆனால் துளசி அதை நிராகரிப்பதுடன் தனி வழியில் செல்ல முடிவெடுக்கின்றாள்.
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[4] "ஆசை அதிகம்" எனும் பாடல் 'சிந்து பைரவி' இராகத்தில் அமைந்துள்ளது.[5] "எல்லோருக்கும் நல்ல காலம்" எனும் பாடல் 'சுத்த தன்யாசி' [6] எனும் இராகத்திலும் "நலம் வாழ" எனும் பாடல் 'மதுகவுன்'[7] எனும் இராகத்திலும் அமைந்துள்ளது.[8]
தமிழ் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "ஆசை அதிகம் வச்சு" | இரவி பாரதி | எஸ். ஜானகி | 4:59 | ||||||
2. | "எல்லோருக்கும் நல்ல காலம்" | வாலி | கே. ஜே. யேசுதாஸ் | 3:32 | ||||||
3. | "எல்லோரும் சொல்லும் பாட்டு" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:53 | ||||||
4. | "நலம் வாழ எந்நாளும்" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:59 | ||||||
5. | "நல்லதோர் வீணை" | பாரதியார் | எஸ். ஜானகி | 4:24 |
இத்திரைப்படம் 14/ஜனவரி/1993 இல் வெளியிடப்பட்டுள்ளது.[9]