மலங்குறவன் | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | கேரளம், தமிழ்நாடு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 19,000 (2001 கணக்கெடுப்பு)[1] |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | mjo |
மொழிக் குறிப்பு | mala1459[2] |
மலங்குறவன் (Malankuravan) என்பது ஒரு வகைப்படுத்தப்படாத ஆகும். தென்னிந்தியாவின், கேரளம், தமிழ்நாடு மாநிலங்களின் தெற்கு எல்லையில் பேசப்பட்டுவரும் ஒரு வகைப்படுத்தப்படாத திராவிட மொழி ஆகும். இம்மொழி ஏறத்தாள 7,339 பேர்களால் பேசப்படுகிறது. தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளாவில், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம் போன்ற மாவட்டங்களிலும் இம்மொழி புழங்கிவருகின்றது. இது தமிழ் மொழியின் செல்வாக்கு கொண்ட மலையாளத்தின் பேச்சுமொழியாக இருக்கலாம்[1] அல்லது மலையாளத்துடன் நெருங்கிய தொடர்புடைய மொழியாக இருக்கலாம்.[3]
மலைக்குறவன், மலக் கொறவன் போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு. இவர்களில் பலர் இன்று மலையாளத்தையே முதல் மொழியாகக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.