கேரளா பாணி மீன் கறி | |
மாற்றுப் பெயர்கள் | மீன் கறி |
---|---|
வகை | கறி |
தொடங்கிய இடம் | இந்தியா |
தொடர்புடைய சமையல் வகைகள் | இந்தியா, இலங்கை |
முக்கிய சேர்பொருட்கள் | மத்தி மீன், கறி, காய்கறிகள், வெண்டைக்காய் அல்லது வெங்காயம்); அரிசி, நான் ரொட்டி, ரொட்டி, மரவள்ளிக் கிழங்கு |
மலபார் மத்தி மீன் கறி (Malabar Matthi Curry), மீன் குழம்பு என்றும் அழைக்கப்படும் துணைக்கறி உணவு வகையாகும். இந்தியாவின் கோவா பகுதி உணவாகும். இது வெண்டைக்காய் அல்லது வெங்காயம் போன்ற பலவகையான காய்கறிகளுடன் சேர்த்து கேரளா பாணியில் சமைக்கப்படும் கறியில், அரை சுண்டவைத்த பதத்தில் மத்தி மீன் (Sardine fish) சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது பொதுவாக அரிசி, நாண், ரொட்டி அல்லது மரவள்ளிக்கிழங்குடன் பரிமாறப்படுகிறது. அரிசி மற்றும் மீன் மிகுதியாக உண்ணப்படும் கேரளா, கோவா மற்றும் இலங்கையில் இந்த உணவு மிகவும் பிரபலமானது. புதுமையை விரும்புவோர் சுவைக்காக புளி சாறு அல்லது தேங்காய் பால் சேர்த்து தயாரிக்கலாம்.
நவீன உணவு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து தோன்றியதாகத் தெரிகிறது.[1]
இலங்கை[2] மற்றும் பிற நாடுகளிலும் மீன் குழம்புகள் உண்ணப்படுகின்றன. இந்தக் குழம்பு பெருமளவில் சமைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, கேன்களில் அடைத்தோ அல்லது நுகர்வோர் வாங்குவதற்கு ஏற்ப நெகிழ்வான பைகளில் நிரப்பப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது.[3][4]