மலாக்கா உயர்நிலைப் பள்ளி Malacca High School SMK Tinggi Melaka | |
---|---|
![]() | |
![]() மலாக்கா உயர்நிலைப் பள்ளி (2015) | |
முகவரி | |
61, சான் கூன் செங் சாலை மலாக்கா மாநகரம், ![]() ![]() | |
அமைவிடம் | 2°11′30″N 102°15′17″E / 2.191775°N 102.254654°E |
தகவல் | |
பிற பெயர் | MHS |
வகை | அரசு உயர்நிலைப்பள்ளி |
குறிக்கோள் | சிறந்த நன்முறைகளைப் பின்பற்றுவோம் (Meliora Hic Sequamur) |
தொடக்கம் | 7 திசம்பர் 1826 |
நிறுவனர் | தோமஸ் மூர் (Thomas H. Moor) |
வேளை | காலை நேரம் |
பள்ளிக் குறியீடு | MEB2090[1] |
அதிபர் | ஜொகான் பின் ஒசுமான் (Tn Hj Johan Bin Othman) |
ஆசிரியர் குழு | 119[1] |
படிவம் | 1-6 |
பால் | ஆண்கள் |
மொத்த சேர்க்கை | 831[1] (2022) |
கற்பித்தல் மொழி | ஆங்கிலம், மலாய் |
வகுப்பறைகள் | 60 |
வளாக வகை | நகர்ப்புறம் |
நிறங்கள் | செவ்வூதா - பச்சை |
ஆண்டு இதழ் | தி ஒப்டிமிஸ்ட் |
இணைப்புகள் | சின்மின் உயர்நிலைப்பள்ளி [2] எல்தாம் உயர்நிலைப்பள்ளி [3] |
இணையம் | sites |
Last updated: 30 நவம்பர் 2022 |
மலாக்கா உயர்நிலைப் பள்ளி (மலாய்: SMK Tinggi Melaka; ஆங்கிலம்: Malacca High School) என்பது மலேசியா, மலாக்கா மாநகரில் உள்ள ஓர் உயர்நிலைப்பள்ளி ஆகும்.[4] 1816-ஆம் ஆண்டில், மலேசியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பினாங்கு பிரீ இஸ்கூல் (Penang Free School) பள்ளிக்குப் பிறகு[5], மலேசியாவின் இரண்டாவது பழைமையான பள்ளியாக, மலாக்கா உயர்நிலைப் பள்ளி வரலாறு படைக்கிறது.
1826 திசம்பர் 7-இல் நிறுவப்பட்ட இந்தப் பள்ளி, மலேசியாவின் மலேசிய சிறப்பு குழுமப் பள்ளி (Cluster School of Excellence) எனும் தகுதியைப் பெற்றுள்ளது. 2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி மலேசியாவில், 10,230 அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றில் 35 பள்ளிகள் மட்டுமே சிறப்பு குழும முறைப் பள்ளிகளாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ள்ன.[6][7]
இந்தப் பள்ளி மலேசியாவின் முதன்மையான பள்ளிகளில் ஒன்றாகவும் அறியப்படுகிறது. மலாக்காவில் 1512-ஆம் ஆண்டில், போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆ பாமோசா கோட்டையின் வடிவம், இந்தப் பள்ளியின் சின்னமாக உள்ளது.
1824-ஆம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு உடன்படிக்கைக்கு பிறகு இடச்சுக்காரர்கள் மலாக்காவைப் பிரித்தானியர்களுக்கு விட்டுக்கொடுத்தனர். 1824-ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி மலாக்கா நகரம், பிரித்தானிய குடியேற்றப் பகுதியாக மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1826-ஆம் ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி, மலாக்கா உயர்நிலைப் பள்ளி நிறுவப்பட்டது.
1825-ஆம் ஆண்டு மலாக்காவிற்கு வந்த தாமஸ் எச். மூர் (Thomas H. Moor) என்பவரால் மலாக்கா உயர்நிலைப் பள்ளி நிறுவப்படுவது பற்றி முன்மொழிவு செய்யப்பட்டது. அந்தக் கட்டத்தில், மலாக்கா இலவசப் பள்ளி (Malacca Free School) எனும் ஒரு பள்ளி மலாக்காவில் இயங்கி வந்தது.
சனவரி 1815-இல், மலாக்கா இடச்சு நிர்வாகத்தின் போது கிறித்துவப் பரப்புரையாளர்களால் நிறுவப்பட்ட இடச்சு-மலாய் பள்ளி மூடப்பட்டது. அதற்கும் மலாக்கா உயர்நிலைப் பள்ளியின் தொடக்கத்திற்கும் நேரடியாகத் தொடர்பு உள்ளதாகவும் அறியப்படுகிறது.
1826-ஆம் ஆண்டில் 18 மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட மலாக்கா உயர்நிலைப் பள்ளி, 2006-ஆம் ஆண்டில் 1,631 மாணவர்களாக உயர்வு கண்டது. அந்த ஆண்டில்தான் மலாக்கா உயர்நிலைப் பள்ளி 180-ஆவது ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடியது.[8]
ஒரே ஓர் அறையில் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது 18 கட்டிடத் தொகுதிகள் உள்ளன. 1828-ஆம் ஆண்டில் முதன்முதலாக 65 மாணவிகள் சேர்க்கப் பட்டார்கள். தற்போது ஏறக்குறைய 400 மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.[8]