கோலாலம்பூர் கிளை வளாகம் | |
குறிக்கோளுரை | அறிவு, அறம், சேவை Ilmu, Budi, Bakti Knowledge, Virtue, Service |
---|---|
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1984 |
வேந்தர் | கெடா சுல்தான் சாலேவுதீன் |
துணை வேந்தர் | பேராசிரியர் போவாட் சக்டான் (Prof. Dr. Fo'ad Sakdan) |
மாணவர்கள் | 33,658[1] (October 2022) |
பட்ட மாணவர்கள் | 27,732 (அக்டோபர் 2022) |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 5,926 (அக்டோபர் 2022) |
அமைவிடம் | , , 6°27′28″N 100°30′20″E / 6.45778°N 100.50556°E |
வளாகம் | சிந்தோக் (நாட்டுப்புறம், தலைமை வளாகம்) கோலாலம்பூர் (நகர்ப்புறம், முதுகலை வளாகம்) ஜித்ரா (முன்னாள் வளாகம்) |
நிறங்கள் | நீலம்; மஞ்சள் |
சேர்ப்பு | ASAIHL, ACU, FUIW, AUN[2] |
இணையதளம் | uum |
மலேசிய உத்தாரா பல்கலைக்கழகம் (University Utara Malaysia, மலாய்: Universiti Utara Malaysia) என்பது மலேசியா, கெடா, சிந்தோக் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பொது மேலாண்மை பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்திற்கு கோலாலம்பூரில் ஒரு கிளை வளாகம் உள்ளது.[3]
கிராமப்புறத்தில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகத்தின் முதனமை வளாகம்; "பசுமைக் காட்டில் உள்ள பல்கலைக்கழகம்" என்று பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தப் பல்கலைக்கழகம் 16 பிப்ரவரி 1984-இல் நிறுவப்பட்டது. 2023-ஆம் ஆண்டில், கியூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையில் 481-ஆவது இடத்தைப் பிடித்தது.[4] அதே 2023-ஆம் ஆண்டில், டைம்ஸ் உலக உயர்க் கல்வித் தரவரிசையில் 99-ஆவது இடத்தைப் பிடித்தது. அந்த வகையில் மலேசியப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.[5]
ஆகஸ்டு 1983-இல் மலேசிய கல்வி அமைச்சு ஒரு பல்கலைக்கழகத்தைக் கட்டுவதற்குத் திட்டம் வகுத்த போது கட்டுமானத் திட்டமிடலும் தொடங்கியது. 19 அக்டோபர் 1983 அன்று, கெடாவில் பல்கலைக்கழகத்தைக் கட்டுவதற்கு மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அந்தக் கட்டத்தில், இந்தத் திட்டம் "ஆறாவது பல்கலைக்கழக திட்டம்" என்று அழைக்கப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு, ஆறாவது பல்கலைக்கழகத்தின் தற்காலிக வளாகம், மலேசிய உத்தாரா பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டது. பின்னர் 15 பிப்ரவரி 1984-இல் ஜித்ராவில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.[3]
முதல் கல்வியாண்டு சூன் 1984-இல் தொடங்கியது. அந்த வேளையில், தாருல் அமான் வளாகம் பண்டார் தாருல் அமான் நகர்ப்பகுதியில் 62 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்தது. இந்த வளாகம் அலோர் ஸ்டாருக்கு வடக்கே 18 கிமீ தொலைவிலும், ஜித்ராவிலிருந்து 4.8 கிமீ தொலைவிலும் இருந்தது.
இதற்கிடையில், நிரந்தர வளாகத்திற்கான பணிகளும் தொடங்கின. குபாங் பாசு மாவட்டத்தின் சிந்தோக் நகரில்1,061 எக்டேர் பரப்பளவில் கட்டுமான வேலைகள் தொடங்கின. அலோர் ஸ்டாருக்கு வடக்கே 48 கிமீ தொலைவிலும், மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ள சிறிய நகரமான சாங்லூன் நகருக்கு கிழக்கே 10 கிமீ தொலைவிலும் நிரந்தர வளாகம் அமையப் பெற்றது.
சிந்தோக் வளாகம் என குறிப்பிடப்படும் நிரந்தர வளாகம் 15 செப்டம்பர் 1990-இல் செயல்படத் தொடங்கியது. இந்த வளாகம் ஒரு முன்னாள் ஈயச் சுரங்கப் பகுதியில், பசுமையான வெப்பமண்டல காடுகளின் பள்ளத்தாக்கில் உள்ளது. நீல நிற மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த வளாகத்தின் நடுவில் சிந்தோக் ஆறு; பாடாக் ஆறு என இரண்டு ஆறுகள் ஓடுகின்றன.
RM 580 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட சிந்தோக் வளாகம் 17 பிப்ரவரி 2004-இல் கெடா சுல்தான் சாலேவுதீன் அவர்களால் திறப்புவிழா கண்டது.