மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் | |
---|---|
மலேசிய நாடாளுகன்றம் | |
மலேசியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு; தடுப்புக் காவலில் வைத்தல்; அடிபணியச் செய்வதைத் தடுத்தல்; மலேசியாவின் குறிப்பிட்ட பகுதிகளில் நபர்கள் மற்றும் சொத்துக்களுக்கு எதிரான வன்முறையை ஒடுக்குதல்; மற்றும் அவை தொடர்பான விசயங்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான சட்டம். | |
சான்று | Act 82 |
நிலப்பரப்பு எல்லை | மலேசியா |
இயற்றியது | மக்களவை (மலேசியா) |
இயற்றப்பட்ட தேதி | 22 சூன் 1960 |
இயற்றியது | மேலவை (மலேசியா) |
சட்ட வரலாறு | |
சட்ட முன்வரைவு | உள்நாட்டு பாதுகாப்பு மசோதா 1960 (Internal Security Bill 1960) |
அறிமுகப்படுத்தியது | அப்துல் ரசாக் உசேன், மலேசிய தற்காப்பு அமைச்சர் |
மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (இசா) என்பது (மலாய்: Akta Keselamatan Dalam Negeri, ஆங்கிலம்: Internal Security Act) மலேசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தடுப்புக் காவல் சட்டம் ஆகும்.[1] 1957ஆம் ஆண்டு, பிரித்தானியர்களிடம் இருந்து மலாயா சுதந்திரம் பெற்றதும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. எவ்விதக் குற்றச்சாட்டுகளும் இல்லாமல், தனிமனிதர் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில், விசாரணை இல்லாமல் இரண்டு ஆண்டுகள் தடுத்து வைக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.[2]
இந்தச் சட்டத்தின் கீழ், தொழில்சங்கவாதிகள், மாணவர்த் தலைவர்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், மனித உரிமைப் போராட்டவாதிகள் போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மைய காலங்களில் வலைப் பதிவாளர்களும் ஊடகவியலாளர்களும் தடுத்து வைக்கப்பட்டனர்.[3] 2013 ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை, 10,883 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.[4] இவர்களில் பெரும்பாலோர் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
இந்த உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக, வேறு இரு சட்டங்கள் கொண்டு வரப்படும் என்று பிரதமர் நஜீப் துன் ரசாக் 2011 செப்டம்பர் 15ஆம் தேதி அறிவித்தார்.[5] குற்றச் செயல் பாதுகாப்பு (சிறப்பு காவல் நடவடிக்கைகள்) சட்டம் 2012 எனும் பெயரில் புதிய சட்டம் உருவாக்கப்பட்டு, நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றம் கண்டது. 2012 ஜூன் 18இல் மாமன்னரின் சம்மதத்திற்காகத் தாக்கலும் செய்யப்பட்டது.[6] ஆனால், இது நாள் வரையில் அந்தப் புதியச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை. அதன் தொடர்பாக, மலேசிய உள்துறை அமைச்சரும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.[7]
தடுப்புக் காவல் முறையை 1948இல் மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்கள் நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.[8] மலாயா அவசரகாலத்தின் போது, மலாயா கம்யூனிஸ்டு கட்சியினர் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர்.[9] அவர்களை ஒடுக்குவதற்காக, தடுப்புக் காவல் முறை மலாயாவில் அமலுக்கு வந்தது.[10] அன்றைய காலத்தில், அதாவது 1948இல், தடுப்புக் காவல் முறை ஓர் அவசரகாலச் சட்டமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. அந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு மூல காரணமாக இருந்தவர் சர். எட்வர்ட் ஜெண்ட் எனும் பிரித்தானிய உயர் ஆணையர் ஆகும்.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஒருவரைத் தற்காலிகமாக, ஓர் ஆண்டு காலத்திற்குத் தடுப்பு காவலில் வைக்க முடியும். வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதே அந்தச் சட்டத்தின் தலையாய நோக்கமாக இருந்தது. 1960ஆம் ஆண்டு மலாயாவில் அவசர காலம் முடிவுக்கு வந்தது. 1948ஆம் ஆண்டு மலாயா அவசரகாலச் சட்டமும் நீக்கம் செய்யப்பட்டது.
ஆனால், மலாயா அவசரகாலச் சட்டத்திற்குப் பதிலாக, 1960ஆம் ஆண்டு மலேசிய அரசியலமைப்பின் 149வது விதியின்படி, புதிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும், மலாயா அவசரகாலச் சட்டத்திற்கு இணையான தடுப்புக் காவல் முறை மட்டும், இதுநாள் வரையிலும் தக்க வைக்கப்பட்டுள்ளது. அனைத்துலக மனித உரிமைக் கழகத்தின் கண்டனத்திற்கும் உள்ளாகி வருகிறது.[11]
மலாயாவின் அவசரகாலத்தின் போதும், அதன் பின்னரும் கம்யூனிச செயல்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பதே, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டது. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் மிகைப்படியான அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படமாட்டாது என்று மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் உறுதியாகவும் திடமாகவும் வாக்குறுதி அளித்து இருந்தார்.[12]
அரசியல்வாதிகள் பலர் கைது செய்யப்பட்டு கமுந்திங் தடுப்பு மையம், சுங்கை ரெங்கம் தடுப்பு முகாம்களில் காவலில் வைக்கப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கைகள், பொதுமக்களிடையே பலமான அதிருப்திகளையும், மனக்கசப்புகளையும் ஏற்படுத்தி வந்தன. ஆளும் கட்சியின் அரசியல் நிலைத் தன்மையில் குறை காண்பவர்களின் மீது அந்தச் சட்டம் எகிறிப் பாய்ந்தது.[13]
மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், ஒரு நடுநிலையான மக்களாட்சிக்கு உகந்தது அல்ல என்றும், அது தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்றும், பரவலான அதிருப்திகள், நெடுநாட்களாகப் பொதுமக்களிடம் நீறு பூத்த நெருப்புகளாய்க் கனன்று வருகின்றன.[14]
மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தி அமைப்பதில், அரசாங்கம் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக, மலேசியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும் டத்தோ ஸ்ரீ இசாமுடின் உசேன் கூறியுள்ளார். அந்தத் திருத்தகத்தில் ஐந்து முக்கிய கூறுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அந்த ஐந்து கூறுகள்:
உள்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைப்புகள்:
அந்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அரசாங்கம் அது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டது. விசாரணயின்றி தடுத்து வைக்கப்படும் முறை அகற்றப்பட மாட்டாது என்று அறிவித்தது.[16]
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)