மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் Malaysian Anti-Corruption Commission Suruhanjaya Pencegahan Rasuah Malaysia سوروهنجاي ڤنچڬاهن رسواه مليسيا | |
---|---|
![]() | |
![]() | |
சுருக்கம் | MACC / SPRM |
குறிக்கோள் | கட்டுப்பாடற்ற, வெளிப்படையான, தொழில்முறை Independent, Transparent, Professional Bebas, Telus, Profesional |
துறையின் கண்ணோட்டம் | |
உருவாக்கம் | 1967 |
முந்தைய துறைகள் |
|
பணியாளர்கள் | 3,258 (2024)[1] |
ஆண்டு வரவு செலவு திட்டம் | RM 313,000,600 (2024)[1] |
அதிகார வரம்பு அமைப்பு | |
தேசிய நிலை (செயல்பாட்டு எல்லை) | மலேசியா |
செயல்பாட்டு அதிகார வரம்பு | மலேசியா |
சட்ட அதிகார வரம்பு | தேசிய நிலை |
ஆட்சிக் குழு | ![]() |
Constituting instrument | |
செயல்பாட்டு அமைப்பு | |
தலைமையகம் | MACC Headquarters, No. 2 Lebuh Wawasan, Precinct 7, புத்ராஜெயா |
துறை நிருவாகிகள் |
|
இணையத்தளம் | |
www |
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (மலாய்: Suruhanjaya Pencegahan Rasuah Malaysia (SPRM); ஆங்கிலம்: Malaysian Anti-Corruption Commissiony) (MACC); சீனம்: 马来西亚反贪污委员会) என்பது முன்பு ஊழல் தடுப்பு நிறுவனம் (மலாய்: Badan Pencegah Rasuah (BPR); ஆங்கிலம்: Anti-Corruption Agency) (ACA) என்று அழைக்கப்பட்டது.[2]
மலேசியாவில் பொதுச் சேவை மற்றும் தனியார் துறைகளின் ஊழல் செயல்பாடுகளைப் பற்றி விசாரித்து, வழக்குகளைத் தொடரும் அரசு நிறுவனம் ஆகும்; இதுவே ஊழல் தடுப்பிற்கான உச்சபட்ச அமைப்பாகும்.[3]
9 மார்ச் 2020-இல் லத்தீபா கோயாவிற்குப் பதிலாக அசாம் பாக்கி என்பவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் பொறுப்பை ஏற்றார்.[4][5]
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உண்மைநிலைச் செயல்ப்பாட்டை உறுதிப்படுத்தவும்; பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கண்காணிக்கவும்; ஐந்து சுயேச்சை அமைப்புகள் உள்ளன.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் செயல்பாடுகளில், ஒரு சரியான கண்ணோட்டத்தை வழங்குவதற்காக; மற்ற அரசாங்க அலுவலகங்களில் இருந்து அந்த ஐந்து சுயேச்சை அமைப்புகளும் தனித்தனியாக நிர்வகிக்கப் படுகின்றன.
ஐந்து அமைப்புகள்:
31 சூலை 2010 அன்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அபு காசிம் முகமது, ஒரு முக்கியமான செய்தியை வெளியிட்டார். பொது மக்களின் ஊழல் புகார்கள்; மற்றும் அரசாங்க அமைச்சர்கள் தொடர்பான உயர்மட்ட வழக்குகள்; அவற்றில் ஏதேனும் ஒன்றை அவரின் ஆணையம் விசாரிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால், தாம் பதவி விலகத் தயார் என கூறினார்.
அவரின் செய்தியைப் பிரபல ஊடகப் பதிவரும்; அரசியல் ஆர்வலருமான ராஜா பெத்ரா கமாருடின் (Raja Petra Kamarudin) ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டார்.
ஊழல் தடுப்பு அமைப்பின் (Anti-Corruption Agency) முன்னாள் தலைவர் சுல்கிப்ளி மாட் நூர்; தேசிய குடிமைப் பணியகத்தின் (National Civics Bureau) தலைமை இயக்குநர் சாகுல் அமீட் அப்துல்லா; சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் கிர் தோயோ ஆகியோருக்கு எதிரான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கைகளின் நகல்கள் என்று; அவை தொடர்பான சில பதிவுகளை ராஜா பெத்ரா கமாருடின் தம் புளோகர் அகப் பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த அகப் பக்கப் பதிவுகளில்; பாரிசான் நேசனல் கூட்டணியில் இணைவதற்கு கையூட்டு வழங்க முயற்சிகள் செய்யப்பட்டதாக கெடா, கூலிம் சட்டமன்ற உறுப்பினர் லிம் சூ நீ என்பவரின் விசாரணை அறிக்கையும்; அந்த அகப் பக்கப் பதிவுகளில் சேர்க்கப்பட்டன.[6]
16 சூலை 2009 அன்று, சா ஆலாமில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சிலாங்கூர் அலுவலகத்தில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்த பிறகு, 14-ஆவது மாடியில் இருந்து தியோ பெங் ஹோக் (Teoh Beng Hock) எனும் செய்தியாளர் விழுந்து இறந்து கிடந்தார்.[7]
தியோ பெங் ஹோக், சிலாங்கூர் மாநிலத்தின் செரி கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் இன் யோங் இயான் என்பவரின் அரசியல் உதவியாளராகவும் இருந்தார். செரி கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் இன் யோங் இயான் தொடர்பான ஊழல் விசாரணையில் தியோ பெங் ஹோக் விசாரிக்கப்பட்டார்.[7]
தியோ பெங் ஹோக் இறப்பு தொடர்பாக ஒரு விசாரணை நடத்தப்பட்டது; மற்றும் இறப்பு விசாரணை அதிகாரி ஒரு திறந்தநிலைத் தீர்ப்பையும் வழங்கினார்.[8] அதைத் தொடர்ந்து, இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிய ஓர் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
21 சூலை 2011 அன்று, தியோ பெங் ஹோக் தற்கொலை செய்து கொண்டார் என்று அரச விசாரணை ஆணையம் முடிவு செய்தது. இருப்பினும் தியோவின் குடும்பத்தினர் அந்த முடிவை ஏற்க மறுத்தனர். தியோ பெங் ஹோக் உண்மையில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று வலியுறுத்தினர்.[9][10]
6 ஏப்ரல் 2011 அன்று, கோலாலம்பூர் கூட்டாட்சி ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தின் 3-ஆவது மாடியில் இருந்து கீழே உள்ள பூப்பந்து விளையாட்டு வளாகத்தில் அகமத் சர்பானி முகமது என்பவர் விழுந்து இறந்து கிடந்தார்.
அகமத் சர்பானி முகமது, கிள்ளான் துறைமுகத்தில் ஒரு சுங்க அதிகாரியாகப் பணிபுரிந்தார். 62 சுங்க அதிகாரிகளை உள்ளடக்கிய ஓர் ஊழல் வழக்கில், அவரும் ஈடுபட்டு இருக்கலாம் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.[11]
டத்தோ அந்தோணி கெவின் மொரைஸ் (Datuk Anthony Kevin Morais) (22 மார்ச் 1960 - செப்டம்பர் 2015) என்பவர் மலேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்; மலேசிய தலைமை வழக்குரைஞர் துறையில் (Attorney General's Chambers of Malaysia) அரசு தரப்பு வழக்குரைஞர்; மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கான அரசு வழக்குரைஞர்; ஆகிய பதவிகளை வகித்தார்.
அந்தோணி கெவின் மொரைஸ், கடைசியாக 4 செப்டம்பர் 2015 அன்று, கோலாலம்பூர் சிகாம்புட்டில் உள்ள மெனாரா டூத்தா அடுக்குமாடி தளவீட்டை விட்டு, புத்ராஜெயாவில் உள்ள அரசு சட்டத் தலைமை அலுவலகத்திற்குப் பணிபுரியச் சென்றார். அதன் பின்னர் அவர் காணப்படவில்லை.[12]
அந்தோணி கெவின் மொரைஸ் காணாமல் போனோர் என அவரின் இளைய சகோதரர் மறுநாள் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கு முன்னதாக, பேராக்கில் ஒரு செம்பனைத் தோட்டத்தில், அவருக்குச் சொந்தமான மகிழுந்து போன்ற அமைப்பைக் கொண்ட ஒரு மகிழுந்து வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது.[13][14]
அதன் பின்னர், செப்டம்பர் 16, 2015 அன்று, சிலாங்கூர், சுபாங் ஜெயா, யுஎஸ்ஜே 1-இல் (USJ 1, Subang Jaya) பைஞ்சுதை நிரப்பப்பட்ட ஒரு கொள்கலனில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.[15]
4 அக்டோபர் 2016 அன்று, சபா மாநில நீர்வளத் துறை அலுவலகத்தில், ஒரு நடவடிக்கையின் போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் RM 114.5 ரிங்கிட் மில்லியனுக்கும் அதிகமான பணத்தை பறிமுதல் செய்தது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வரலாற்றில், ஊழல் தொடர்பான நடவடிக்கைகளில், அதுவே மிகப்பெரிய பறிமுதல் நடவடிக்கை என்று அறியப்படுகிறது.[16]
1MDB முதலீட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்.ஆர்.சி. இன்டர்நேசனல் நிறுவனத்தில் (SRC International Sdn Bhd) இருந்து நஜீப் ரசாக்கின் வங்கிக் கணக்கிற்கு RM 42 ரிங்கிட் மில்லியன் (US $10.6 மில்லியன்) எப்படிச் சென்றது என்பதை விசாரித்தது.
அதன் பின்னர் 3 சூலை 2018 அன்று, முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டார். US $ 273 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1,400 அட்டிகைகள், 567 கைப்பைகள், 423 கைக்கடிகாரங்கள், 2,200 மோதிரங்கள், 1,600 அணியூக்குகள் மற்றும் 14 தலைப்பாகைகள் ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றினர்.[17]
28 சூலை 2020 அன்று, அதிகார முறை கேடு, பணமோசடி மற்றும் நம்பிக்கை மீறல் போன்ற ஏழு குற்றச்சாட்டுகளில் நஜீப் ரசாக் குற்றவாளி என மலேசிய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[18][19] மற்றும் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை; RM 210 ரிங்கிட் மில்லியன் தண்டம் விதிக்கப்பட்டது. அந்த வகையில், ஊழல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட மலேசியாவின் முதல் பிரதமரானார்.[20][21]