اونيۏرسيتي مليسيا كلنتن | |
![]() | |
குறிக்கோளுரை | தொழில் முனைவு எங்களின் முக்கியத்துவம் Entrepreneurship Is Our Thrust |
---|---|
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 2007 |
வேந்தர் | சுல்தான் ஐந்தாம் முகமது (கெடா சுல்தான்) |
துணை வேந்தர் | பேராசிரியர் டத்தோ ரசுலி ரசாக் (Prof. Dato' Dr. Razli bin Che Razak) |
நிருவாகப் பணியாளர் | 1,200 |
மாணவர்கள் | 9,000 |
பட்ட மாணவர்கள் | 6,000 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 500 |
அமைவிடம் | , , |
சுருக்கப் பெயர் | UMK |
இணையதளம் | www |
![]() |
மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகம் (University of Malaysia Kelantan, மலாய்: Universiti Malaysia Kelantan) என்பது மலேசியா, கிளாந்தான், மாநிலத்தில் உள்ள ஒரு பொது பல்கலைக்கழகம்; மற்றும் மலேசியாவில் நிறுவப்பட்ட 19-ஆவது பொது உயர்கல்வி நிறுவனமும் ஆகும். 1 ஜூலை 2007-இல் அதிகாரப்பூர்வமாகத் தன் கல்விச் செயல்பாடுகளைத் தொடங்கியது.[1]
மலேசியாவின் ஒன்பதாவது திட்டத்தின் (Ninth Malaysia Plan) கூறுகளில் ஒன்றாக மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அப்துல்லா அகமது படாவி மார்ச் 31, 2006 அன்று, மலேசிய மக்களவையில் 9-ஆவது மலேசியத் திட்டத்தை அறிவித்த போது, கிளாந்தானில் ஒரு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அரசாங்கத்தின் ஒப்புதலைத் தெரிவித்தார். சூன் 14, 2006 அன்று, பல்கலைக்கழகம் அமைப்பதற்கு மலேசிய அமைச்சரவை ஒருமித்த ஒப்புதலை வழங்கியது.
மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகம், 1 சூலை 2007 அன்று, கோத்தா பாரு, பெங்காலான் செப்பா புறநகர்ப் பகுதியில், ஒரு தற்காலிக வளாகத்தில் 295 மாணவர்களுடன் அதன் முதல் செயல்பாட்டைத் தொடங்கியது.[2]
தற்ப்போது இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மேலும் இரண்டு துணை வளாகங்கள் உள்ளன. ஒரு வளாகம் பாச்சோக் நகரில் உள்ளது. மற்றொரு வளாகம் ஜெலியில் உள்ளது.[3]
* பெங்காலான் செப்பா வளாகம்