Immigration Department Of Malaysia Jabatan Imigresen Malaysia | |
மலேசிய குடிவரவு துறை சின்னம் | |
மலேசிய குடிவரவு துறை தலைமையகம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1906 |
ஆட்சி எல்லை | மலேசியா |
தலைமையகம் | Level 1–7 (Podium) & Level 1–4 (Menara) No 15, Persiaran Perdana, Precinct 2, 62550 புத்ராஜெயா 2°55′8.9″N 101°41′15.8″E / 2.919139°N 101.687722°E |
பணியாட்கள் | 15,647 (2023)[1] |
ஆண்டு நிதி | MYR 1,123,500,000 (2023)[1] |
அமைச்சர் |
|
அமைப்பு தலைமை |
|
வலைத்தளம் | www |
அடிக்குறிப்புகள் | |
(குடியேற்ற சட்டம் 1959/63 (திருத்தம் 2002) குடியேற்ற சட்டவிதிகள் 1963; 1966; 2003 (Immigration Act 1959/63 (Amendant 2002) Immigration Rules 1963 Passport Act 1966 and Immigration Detantion Camp Rules 2003 |
மலேசிய குடிவரவு துறை (மலாய்: Jabatan Imigresen Malaysia; ஆங்கிலம்: Immigration Department of Malaysia) என்பது மலேசிய குடிமக்கள் (Malaysian Citizens), நிரந்தர குடியிருப்பாளர்கள் (Permanent Residents) மற்றும் வெளிநாட்டு வருகையாளர்களுக்கு (Foreign Visitors) சேவைகளை வழங்கும் மலேசிய நடுவண் அரசாங்கத்தின் ஓர் அரசு நிறுவனமாகும்.
இந்தத் துறை மலேசிய உள்துறை அமைச்சின் (Ministry of Home Affairs Malaysia) கீழ் செயல்படுகிறது.
மலேசிய குடிவரவுத் துறையின் முதல் தலைமையகம் 1947-ஆம் ஆண்டில் பினாங்கில் நிறுவப்பட்டது.
குடிவரவுத் துறையின் தலைமையகம்; செப்டம்பர் 2004 வரை கோலாலம்பூர் மாநகர்ப் பகுதிக்குள் பலமுறை; பல இடங்களில் மாற்றப்பட்டது. கடைசியாக புத்ராஜெயாவின் கூட்டரசு அரசாங்க நிர்வாகப் பகுதிக்கு மாற்றப்பட்டது.