மலேசிய கூட்டரசு சாலை 10 Malaysia Federal Route 10 Laluan Persekutuan Malaysia 10 | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 122.21 km (75.94 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | தெமர்லோ, பகாங் |
கூட்டரசு சாலை 87 கூட்டரசு சாலை 2 | |
தெற்கு முடிவு: | கிம்மாஸ், நெகிரி செம்பிலான் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | மெங்காராக் பெரா திரியாங் மெங்குவாங் கெமாயான் ஜெம்புல் நகரம் பகாவ் ரொம்பின் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
மலேசிய கூட்டரசு சாலை 10 (ஆங்கிலம்: Malaysia Federal Route 10; மலாய்: Laluan Persekutuan Malaysia 10 என்பது மலாயா தீபகற்பத்தின் மத்தியப் பகுதியில் இயங்கும் முக்கியமான மலேசியக் கூட்டரசு சாலை அமைப்பாகும்.
மலேசியாவின் பழைமையான சாலைகளில் இந்தச் சாலையும் ஒன்றாகும்.[1]
122.21 கிமீ (75.94 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை பகாங் தெமர்லோ நகரத்தையும் நெகிரி செம்பிலான் கிம்மாஸ் நகரத்தையும் இணைக்கின்றது.
மலேசிய கூட்டரசு சாலை 10-இன் கிலோமீட்டர் '0' (Kilometre Zero) என்பது; மத்திய தீபகற்ப மலேசியாவின் முக்கிய கூட்டரசு சாலையான மலேசிய கூட்டரசு சாலை 1யும்; மலேசிய கூட்டரசு சாலை 10-யும்; இணையும் இடமான நெகிரி செம்பிலான் கிம்மாஸ் நகரத்தில் உள்ளது.
மலேசிய கூட்டரசு சாலை 10-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.
தெமர்லோ நகரம் மலேசியாவில் மிகப் பழைமையான நகரங்களில் தெமர்லோ நகரமும் ஒன்றாகும். 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காலனிய கால கட்டிடங்களும்; கடை வீடுகளும் இன்றும் பழைய வரலாற்றை அங்கு பறைசாற்றுகின்றன.
தெமர்லோ நகரம், தீபகற்ப மலேசியாவின் மையம் (Centre of Peninsular Malaysia) என உறுதி செய்யப்பட்டு உள்ளது. லஞ்சாங் கம்போங் பாயா சிப்புட் எனும் இடத்தில் அந்த மையப்புள்ளி அமைந்து உள்ளது.[2]